திருப்பூரில் வீடு புகுந்து திருட முயற்சி... மூவரை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பல்லடம்: திருப்பூரில் பனியன் கம்பெனி நிறுவன மேலாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்தபோது பொதுமக்களால் பிடிபட்ட 3 பேர் தர்ம அடி கொடுக்கப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி அதிகாலையில் வாசலில் கோலம் போட சென்றார். அப்போது 9 பேர் கொண்ட கும்பல் அவரது வாயை பொத்தி வீட்டுக்குள் அழைத்து சென்றனர்.

அப்போது அங்கு வந்த வெங்கட்ராமனிடம் பணம் கேட்டு அந்த கும்பல் அடித்தது. இதைத் தொடர்ந்து வலி தாள முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதைக் கேட்ட பொதுமக்கள் வீட்டை சுற்றி வளைத்தனர். அதற்குள் 9 பேரில் 6 பேர் தப்பிவிட்டனர்.

பிடிபட்ட 3 பேரை கம்பத்தில் கட்டிவைத்த பொதுமக்கள் சரமாரியாக அடித்தனர். அதன் பின்னர் தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த 3 பேரையும் கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Robberers were got inside the house of Tiurppur Banian company Manager's house and attacked the manager. On hearing his noise, people in the surrounding gathered before house and they caught 3 out of 9 robberers.
Please Wait while comments are loading...