கேளிக்கை வரியை ரத்து செய்யுங்கள் - தமிழக அரசுக்கு ரஜினி வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கேளிக்கை வரி விவகாரத்தில் திரைத்துறையினரின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கவும் என்று நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் திரையரங்குகளுக்கு 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் உள்ள திரையங்கு உரிமையாளர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

30% entertainment tax Rajini request the TN GOVT

இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி 28 சதவிகிதம், கேளிக்கை வரி 30 சதவிகிதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழ் சினிமா துறையில் பணிபுரியும் லட்சகணக்கவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்கும் படி தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajinikanth post his twitter page, Keeping in mind the livelihood of Lakhs of people in the tamil film industry, I sincerely request the TN GOVT to seriously consider our plea
Please Wait while comments are loading...