ஜெயலலிதா மரணம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் ஆறுமுகசாமி கமிஷனுக்கு மாற்றம்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் ஆறுமுகசாமி கமிஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக காவல்நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் ஆறுமுகசாமி கமிஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது மரண செய்தி தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. தமிழகம் முழுவதும் பல்வேறு காவல்நிலையங்களில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. இந்த கமிஷன் ஜெயலலிதா மரணம் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து காவல்நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் விசாரணை கமிஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல்நிலையங்களில் அளிக்கப்பட்டிருந்த 302 புகார்கள் ஆறுமுகசாமி கமிஷனுக்கு மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications