ஆம்பூர் அருகே பாலாற்றில் தேங்கிய தோல் கழிவுநீரை குடித்து 3,600 வாத்துகள் பலி
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாலாற்றங்கரைகளில் வாத்து வளர்ப்பு தொழில் நடந்து வருகிறது. இந்நிலையில், பாலாற்றில் ஓடி வந்த தோல்கழிவுநீரை பருகிய வாத்துகள் திடீரென மணலில் சுருண்டு விழுந்து இறந்தன.
நேற்று மாலை வரை 3,420 வாத்துக்கள் அடுத்தடுத்து இறந்தன. இன்று காலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இறந்த வாத்துக்களை உரிமையாளர் கோபியும் அவரது குடும்பத்தினரும் பாலாற்றின் மணலிலேயே குழிதோண்டி புதைத்தனர்.

ஆம்பூர் அருகே அயித்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோபி (வயது 32). இவர் சுமார் 4 ஆயிரம் வாத்து குஞ்சுகளை ஆலங்காயம், குடியாத்தம் ஆகிய இடங்களில் இருந்து வாங்கி வளர்த்து வந்தார். ஆம்பூர் அருகே கொம்மேஸ்வரம் பாலாற்றின் பாலத்தின் அருகில் ஒதுக்குபுறமான இடத்தில் கொட்டகை அமைத்து வாத்து வளர்ப்பில் ஈடுபட்டார்.
தினமும் பாலாற்றில் அவர் வாத்துக்களை மேய்த்து விட்டு அருகில் உள்ள பாலாற்றில் ஓடும் நீரை வாத்துக்கள் குடிக்க விடுவது வழக்கம். கடந்த 60 நாட்களாக எந்தவித நோயும் தாக்கவில்லை.
நேற்று மாலையில் பாலாற்றில் வழக்கம்போல வாத்துக்கள் நீரை அருந்தியது. பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக வாத்துக்கள் திடீரென சுருண்டு விழுந்து இறந்தது. வாத்துகளுக்கு மருந்து கொடுத்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் சுமார் 3 ஆயிரம் வாத்துக்கள் இறந்து போனது. இதையடுத்து கோபியும் அவரது குடும்பத்தினரும் பாலாற்று மணலில் குழி தோண்டி வாத்துக்களை புதைத்தனர்.
பாலாற்றின் அருகில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, சுமார் 3 ஆயிரத்து 600 வாத்துக்கள் இந்த நீரை பருகி இறந்துள்ளன. இதற்கு முன்னர் பலமுறை புகார் தெரிவித்தும் மாவட்ட மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் சில தோல் தொழிற்சாலைகளில் இருந்து பைப் லைன்களே அமைத்து கழிவுநீரை அப்பட்டமாக வெளியேற்றுகின்றனர். கழிவுநீரை குடித்த வாத்துக்களுக்கு இந்த கதி என்றால் பாலாற்று குடிநீரை பயன்படுத்தும் மக்களின் கதி என்ன? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
கடந்த இரு தினங்களாக வேலூர் பாலாற்றில் உள்ள குட்டைகளில் ரசாயன கழிவுநீர் கலந்து லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது. இப்போது ஆயிரக்கணக்கான வாத்துக்கள் உயிரிழந்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications