For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை தமிழகத்தின் 38 எம்.பிக்கள் புறக்கணிக்கின்றனர்?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பது உறுதி என்பதால் தமிழகத்தில் அதிமுகவிவின் 37 எம்.பிக்கள், பாமகவின் ஒரு எம்.பி என 38 எம்.பிக்களும் அந்த விழாவை புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நரேந்திர மோடி வரும் 26-ந் தேதி டெல்லியில் பிரதமராக பதவியேற்க உள்ளார். அந்த விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் கலந்து கொள்கிறார்.

ஆனால் இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவை அழைக்கவே கூடாது என்று தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான மதிமுக, பாமக ஆகியவையும் ராஜபக்சேவை அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

டெல்லியில் வைகோ முகாம்

டெல்லியில் வைகோ முகாம்

இதற்காகவே டெல்லியில் முகாமிட்டுள்ள மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திர மோடி ஆகியோரை நேரில் சந்தித்து தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்தியும் வருகிறார். ஆனாலும் பாஜகவினர் கேட்பதாக இல்லை.

தமிழகத்தில் போராட்டங்கள்

தமிழகத்தில் போராட்டங்கள்

தமிழகத்தின் மிகக் கடுமையான எதிர்ப்பை மீறி ராஜபக்சேவை அழைப்பது என்ற பாஜகவின் முடிவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் மொத்தம் உள்ள 39 எம்.பிக்களில் அதிமுகவைச் சேர்ந்த 37 எம்.பிக்கள் மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கக் கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜோதியில் கலந்த பா.ம.க.

ஜோதியில் கலந்த பா.ம.க.

இந்த ஜோதியில் பா.ம.க.வும் கலந்து கொண்டு மோடி பதவியேற்பை புறக்கணிக்கக் கூடும் என்று தெரிகிறது.

அமைச்சர் பதவி கிடைக்கலையே..

அமைச்சர் பதவி கிடைக்கலையே..

ராஜபக்சே அழைக்கப்படுகிறார் என்பது கடந்த 3 நாட்களாக பேசப்படுகிற செய்தி. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியோ கடுமையாக மவுனம் காத்து வந்தது. அதற்குக் காரணம் எப்படியும் மோடி அமைச்சரவையில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கைதான்.

உறுதி இல்லை..

உறுதி இல்லை..

ஆனால் மோடி அமைச்சரவையில் இடம் கிடைக்காது என்ற நிலையில் இப்போது பா.ம.கவும் ராஜபக்சேவை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த 39 எம்.பிக்களில் 38 பேர் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கக் கூடும் என்றே தெரிகிறது.

பொன்னார் மட்டும் போவார்

பொன்னார் மட்டும் போவார்

தமிழகத்தில் பாஜக சார்பில் வென்ற ஒரு எம்.பி.யான பொன். ராதாகிருஷ்ணன் மட்டும் மோடி பதவியேற்பு விழாவுக்குப் போவார்.

English summary
AIADMK is likely to boycott the swearing-in ceremony of Prime Minster-designate Narendra Modi, which is scheduled to take place at the Rashtrapati Bhavan in New Delhi on May 26. It has 37 MPs in Parliament. Also BJP ally PMK may boycott the ceremony,sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X