39 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஊழல் புகார்: விசாரணை நடத்த மத்திய அரசு அதிரடி உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் அரசு பணியில் உள்ள 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. புகார் பற்றி விசாரணை நடப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஊழல் குற்றச்சாடுக்களின் காரணமாக 39 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் 39 பேர் மீது ஊழல் புகார் பற்றி விசாரணை நடப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மட்டுமின்றி, மத்திய அமைச்சரவை பணிகளில் ஈடுபட்டுள்ள 29 ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் முறைகேடு புகார் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

39 IAS officers are under investigation for their alleged involvement

இதன்படி, மொத்தம் 68 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இவர்களில் பலர் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் எனவும் மத்திய பணியாளர் பயிற்சித் துறை கூறியுள்ளது. புகார் உறுதி செய்யப்படும் பட்சத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடமாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 129 பணியாளர்களுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வு வழங்கியுள்ளது எனவும் பணியாளர் பயிற்சித் துறை மத்திய பணியாளர் பயிற்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As many as 39 IAS officers are under investigation for their alleged involvement in corruption and other irregularities
Please Wait while comments are loading...