உசிலம்பட்டியில் மணல் லாரி மோதி விபத்து - 4 பேர் உடல் நசுங்கி பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: உசிலம்பட்டி அருகே மணல் லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வி.பெருமாள்பட்டி மந்தையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த மணல்
லாரி மோதியது.

பிரேக் பிடிக்காத மணல் லாரி மோதியதில் 4 பேரும் சுவரோடு சுவராக நசுங்கி உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். காயமடைந்தவரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 4 killed in a sand lorry accident near Usilampatti

வி.பெருமாள்பட்டிக்கு மாவட்ட எஸ்.பி விஜயேந்திர பிதாரி விசாரணை மேற்கொண்டுள்ளார். லாரி டிரைவரை கைது செய்யக்கோரியும், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அப்போது பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கட்டிடம் கட்டுவதற்கு மணல் எடுத்துச்செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்வதால் விபத்து நேரிடுவதாகவும் மாவட்ட எஸ்.பியிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Four killed a lorry accident near Usilampatti in Madurai district.
Please Wait while comments are loading...