For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொல்லம், தேங்காய்ப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற ஏழு மீனவர்கள் மாயம் #CycloneOckhi

கன்னியாகுமரியில் இருக்கும் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் இருந்தும் கொல்லம் துறைமுகத்தில் இருந்தும் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயமாகி உள்ளனர்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    குமரியை புரட்டிப்போட்ட மழை..தாண்டவம் ஆடிய ஓகி ..தென்கோடியில் என்ன நடக்கிறது?- வீடியோ

    கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இருக்கும் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் இருந்தும் கொல்லம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயமாகி உள்ளனர். 30 மணி நேரமாகியும் கடலுக்கு சென்ற 7 மீனவர்களும் திரும்பி வராத காரணத்தால் மீனவர்களின் குடும்பத்தினர் பதற்றத்தில் உள்ளனர்.

    ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் சுற்றவட்டாரப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 7 மீனவர்கள் இன்னும் வீடு திரும்பாமல் உள்ளனர்.

    7 Fishermen are missing from coastal villages after Ockhi

    கன்னியாகுமரியில் இருக்கும் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சென்ற அருளப்பன் (35), சர்ஜன் (32), ஜெயின் (36), ராகேஷ் (31) என்ற நான்கு பேர் காணாமல் போய் உள்ளனர். அதேபோல் கொல்லம் துறைமுகத்தில் இருந்து சென்ற அந்தோணி (40), கெஜின் (30), கெப்சன் (19) என்ற தமிழ்நாட்டின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் காணாமல் போய் உள்ளனர்.

    இதுகுறித்து மரியா விஜயன் என்பவர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ''நேற்று காலை மீன் பிடிக்க சென்றவர்கள் இன்னும் திரும்பவில்லை. அரசு உடனடியாக அவர்களை கண்டுபிடிப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் அவர்கள் வீடு திரும்பாத காரணத்தால் உடனடியாக ஹெலிகாப்டர் உதவியுடன் அவர்களை தேடி மீட்க வேண்டும். அவர்கள் அனைவரும் எளிதாக உடையக் கூடிய நாட்டுப் படகுகளில் சென்று உள்ளனர்'' என்று கவலை தெரிவித்து இருக்கிறார்.

    English summary
    7 Fishermen are missing from coastal villages after Ockhi. 4 Fisherman from Thenkapattinam harbor and 3 Fisherman from Kollam harbor has gone missing.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X