இலங்கை கடற்படை அட்டூழியம்... 8 தமிழக மீனவர்கள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாகை: யாழ்ப்பாணம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறி 8 நாகப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

நாகை மாவட்டம் அக்கரைபேட்டையை சேர்ந்த செல்வம், முகேஷ், ராஜசேகர், வினோத், செந்தில், ரமேஷ்குமார், சக்திவேல் உள்ளிட்ட 8 மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

8 tamil fishermen arrested by srilanka navy

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி அந்த 8 பேரையும் நேற்று இரவு கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் தங்களது எல்லை குறித்த விளக்கப்படத்தையும் வெளியிட்டு உள்ளனர். இதில் தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டியதாக குறிப்பிட்டுள்ளனர்.

8 tamil fishermen arrested by srilanka navy

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை கைப்பற்றுவதும் தொடர்கதையாகி வருகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
8 Tamil fishermen was arrested by srilankan navy for border crossing.
Please Wait while comments are loading...