கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த பேராசிரியை.. விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கல்லூரி கணிதப் பேராசிரியை நிர்மலா தேவி பாருக்காக பேசினார்?- வீடியோ

  சென்னை: கல்லூரி மாணவிகளை கல்லூரி பேராசிரியை பாலியல் தொழிலுக்கு அழைத்த சம்பவம் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியை நிர்மலா தேவி.

  இவர் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு போன் செய்து அவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மறைமுகமாக அழைக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  நிர்மலாவுக்கு எதிர்ப்பு

  நிர்மலாவுக்கு எதிர்ப்பு

  பேராசிரியை நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர்களும் சக மாணவ மாணவிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பேராசிரியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  5 பேர் கொண்ட குழு

  5 பேர் கொண்ட குழு

  இந்நிலையில் மாணவிகளை தவறாக வழி நடத்திய பேராசிரியை குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை மதுரை பல்கலைக்கழகம் அமைத்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலை. கணிதத்துறை தலைவர் லெல்லீஸ் திவாகர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை உத்தரவிட்டுள்ளார்.

  அறிக்கை தாக்கல் செய்யும்

  அறிக்கை தாக்கல் செய்யும்

  சிண்டிகேட் உறுப்பினர் ஆண்டியப்பன் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

  சம்பந்தமில்லை

  சம்பந்தமில்லை

  நிர்மலா தேவிக்கும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A group of 5 people has been set up to investigate the case of college professor Nirmala Devi talk with college students.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற