பத்மபூஷண் விருது பெற்ற நாகசாமி திருக்குறளை இழிவுபடுத்தி நூல் வெளியீடு- தமிழறிஞர்கள் கொந்தளிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  திருக்குறளை இழிவுபடுத்திய நாகசாமி | Oneindia Tamil

  சென்னை: பத்ம பூஷண் விருதுபெற்ற தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி திருக்குறளை இழிவுபடுத்தி நூலை வெளியிட்டிருப்பது தமிழறிஞர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

  தொல்லியல் ஆய்வாளர் நாகசாமிக்கு அண்மையில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தொல்லியல் ஆய்வாளராக இருந்தும் இந்துத்துவா சார்பானவர் என்பதால் இவ் விருது வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

  சமஸ்கிருத ஆதரவாளர்

  சமஸ்கிருத ஆதரவாளர்

  தமிழும் தமிழர்தம் தொன்மையான நூல்களும் சமஸ்கிருதத்தில் வந்தவை என்கிற நிலைப்பாட்டைக் கொண்டவர் நாகசாமி. அவரது பல ஆய்வுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

  திருக்குறளை இழிவுபடுத்தி நூல்

  திருக்குறளை இழிவுபடுத்தி நூல்

  இந்நிலையில் Thirukkural - An Abridgement of Sastras என்ற தலைப்பில் ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார் நாகசாமி. திருக்குறள் என்பதே

  திருக்குறள் வடமொழி காப்பியாம்

  திருக்குறள் வடமொழி காப்பியாம்

  திருக்குறள் என்பதே தர்மசாஸ்திரம், அர்த்த சாஸ்திரம், நாட்ய சாஸ்திரம், காம சாத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதுதான் நாகசாமியின் நூலின் சாராம்சம். இது தமிழறிஞர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

  திருக்குறளை இழிவுபடுத்துவதா?

  திருக்குறளை இழிவுபடுத்துவதா?

  நாகசாமியின் திருக்குறளை இழிவுபடுத்தும் நூலுக்கு வரிக்கு வரி மறுப்புகளும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஒடிஷா அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ஆர். பாலகிருஷ்ணன் போன்றோர் நாகசாமியின் இழிவுபடுத்தலை மிகக் கடுமையாக கண்டித்தும் வருகின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Padma Bhushan Nagaswamy's Book on Thirukkural has created new controversy.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற