For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும்.. இதோ இன்னொரு பஞ்சாங்க கணிப்பு!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    புயல் தாக்கும்.. தமிழகம், கர்நாடகம், கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் : பஞ்சாங்க கணிப்பு!- வீடியோ

    சென்னை: தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவில் புயல் தாக்கும் என்று வாக்கிய பஞ்சாங்க கணிப்பு ஒன்று கூறியுள்ளது.

    2015-ஆம் ஆண்டு சென்னை சந்தித்த பெரு வெள்ளம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதாகும். இதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. தாம்பரம், முடிச்சூர், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் முதல் தளம் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்தது.

    இதையடுத்து கடந்த 2016, 2017-ஆம் ஆண்டு இதுபோன்று பாதிப்புகள் ஏற்படுமா என்று அச்சத்தில் இருந்தனர் தமிழக மக்கள். எனினும் பயந்தார் போல் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில் தென்மேற்கு பருவமழையால் கேரளம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது.

    வெள்ளம் தாக்கும்

    100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது எங்கு திரும்பினாலும் வெள்ளம் சூழ்ந்த நிலை உள்ளது. இந்நிலையில் பஞ்சாங்கத்தை அடிப்படையாக கொண்டு வானிலையை கணக்கிடும் புயல் ராமசந்திரன் தமிழகத்தில் புயல், வெள்ளம் பலமாக தாக்கும் என்று கடந்த ஓராண்டுக்கு முன்னரே குறித்து வைத்திருந்தார்.

    விஷயங்கள்

    விஷயங்கள்

    இது தற்போது செய்தியாக வெளியே வரும் நிலையில் மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும்படி உள்ளது. இந்த பரபரப்புக்கு அடங்குவதற்கு வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் வைரலாகி வருகின்றன.

    அரபிக் கடலின் மைய பகுதி

    அரபிக் கடலின் மைய பகுதி

    அதாவது இந்த ஆண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, பாலக்காடு, பெங்களூர், ஆசன், பெல்காம், பம்பாய், மேற்கு தொடர்ச்சி மலை அரபிக்கடலின் மைய பகுதியில் சிறு நிலநடுக்கம் ஏற்படும்.

    வெள்ளத்தால் தத்தளிக்கும்

    வெள்ளத்தால் தத்தளிக்கும்

    இந்தியாவின் மைய கடல் பகுதியில் பெருத்த நிலநடுக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக பெரும் புயல் உற்பத்தி ஆகி தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகியன வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழ்நிலை உருவாகும்.

    சென்னையை பலமாக தாக்கும்

    சென்னையை பலமாக தாக்கும்

    சென்னையை பலமாக தாக்கும். பறவையினம் சில இடங்களில் அதிக குளிரால் இறக்க நேரும் என்று அந்த பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதுபோன்ற கணிப்புகளை படித்து பார்த்துவிட்டு மறந்துவிடுமாறு நேயர்களிடம் கேட்டுக் கொள்கிறோம். எப்போதும் அறிவியல் சார்ந்த விஷயங்களையே நம்புமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    English summary
    Vaakiya Panchangam says that Tamilnadu, Kerala and Karnataka will witness flood, cyclone. Chennai will get more worst.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X