தூத்துக்குடி அருகே மீனவர் சரமாரியாக வெட்டி படுகொலை.. பதற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: குடும்ப பிரச்சனையில் மீனவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பிவிஆர்புரத்தை சேர்ந்தவர் லசிங்டன். இவர் தூத்துக்குடியில் மீன் பிடி தொழில் செய்து வந்தார். இவருககும் சண்முகபுரத்தை சேர்ந்த லுதர்ம்மாள் என்பவருக்கும் திருமணமாகி 10 மாத பெண் குழந்தை உள்ளது.

A fisherman killed near in Tuticorin due to family problem

லசிங்டனுக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லுர்தம்மாள் கடந்த சில வாரங்களாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லசிங்டன் குழந்தையை தனது வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். இது தொடர்பாகவும், லூதர்ம்மாளுடன் சேர்ந்து வாழ்வது தொடர்பாகவும் லுர்தும்மாளின் அண்ணன் மேன்சனுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மாலை வழக்கம் போல் வீட்டில் இருந்து புறப்பட்ட லசிங்டன் மீன் பிடிக்க செல்வதாக கூறி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டுக்கு அருகேயுள்ள புல் தோட்டம தாமஸ் நகர் பகுதியில் முகம், கழுத்து, தலை ஆகிய பகுதிகளில் வெட்டு காயத்துடன் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எஸ்பி மகேந்திரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட தகராறில் மேன்சன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகின்றனர்.

மேலும் மது அருந்தியது தொடர்பாக தகராறு ஏற்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A fisherman killed near in Tuticorin due to family problem. Police starts inquiry about.
Please Wait while comments are loading...