For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 பெண்களை ஏமாற்றி திருமணம் - காதல் மன்னனுக்கு போலீஸ் வலை

Google Oneindia Tamil News

நெல்லை: 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த காதல் மன்னனை போலீசார் தேடி வருகி்ன்றனர்.

நெல்லை தச்சநல்லூர் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நதிராபானு. இவர் தனது மூன்று குழந்தைகளுடன். மாதர் சங்கத்தை சேர்ந்த சிலருடன் நெல்லை கலெக்டர் அலுவலகம் வந்தார்.

அங்கு அவரிடம் அளித்த மனுவில், எனக்கும் மேலப்பாளையம் ராஜா நகரை சேர்ந்த அன்சர் என்பவருக்கும் இஸ்லாமிய முறைப்படி 2009ல் திருமணம் நடந்தது. அன்சார் நெல்லையில் ஓட்டல் நடத்தி வருகிறார். முதல் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்று ஏமாற்றி என்னை திருமணம் செய்தார்.

சில நாட்கள் கழித்தே என் கணவர் என்னை 5வதாக திருமணம் செய்தது தெரிய வந்தது. எனக்கு 10 பவுன் நகை சீதனமாக எனது பெற்றோர் கொடுத்தனர். 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து நான அவரிடம் கேட்டதற்கு எனக்கு 4 மனைவிகள், 16 குழந்தைகள் உள்ளனர். இதை உன்னால் ஏற்று கொள்ள முடியவில்லை என்றால் என்னுடன் நீ வாழ முடியாது என்று கூறினார். ஏழ்மை காரணமாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் திடீரென அவர் வேறு பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என்று கூறி என்னை கையெழுத்து போட சொல்கிறார். நான் மறுக்கவே சாப்பாடு போடாமல் என்னை பட்டினி போடுகிறார். அவரது கொடுமை தாங்காமல் பெற்றோர் வீட்டுக்கு சென்றேன்.

6 கழித்த நிலையில் என்னுடன் சேர்ந்து வாழ்வதாக கூறி அழைத்து சென்றார். மீண்டும் நான் கார்ப்பமானோன். ஆனால் அவர் கட்டாயப்படுத்தி அதை கலைத்தார். வேலைக்கு வரும் வேலைக்கார பெண்ணிடமும் அவர் தவறாக நடந்து கொண்டார்.

அதன் பின் அந்த வீட்டை காலி செய்து விட்டு மேல்பாளையம் வந்தோம். அங்கும் வேறொரு பெண்ணை அழைத்து வந்தார். தட்டி கேட்ட என்னை அடித்து மிதித்து வீட்டின் உள்ளே வைத்து பூட்டி சென்று விட்டார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் மேலப்பாளையமே அதிர்ந்து போய் கிடக்கிறது.

English summary
a man had 4 marriages in melapalaiyam His 4th wife Nathira filed police complaint about him. police searching for him now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X