வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை: வானிலை மையம் பலத்த மழை வார்னிங்.. வர்லாம் வரலாம் வா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

  சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது.

  தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னை உட்பட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.

  இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்ததால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. பல தனியார் வானிலை ஆய்வாளர்களும் இதையே கூறியிருந்தனர்.

  புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

  புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

  இந்நிலையில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  டெல்டாவில் மிக கனமழை

  டெல்டாவில் மிக கனமழை

  வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில், உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிள்ளது. மேலும் தென் தமிழகம், டெல்டா, கடலோர மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

  சென்னையில் இடியுடன் மழை

  சென்னையில் இடியுடன் மழை

  சென்னையை பொறுத்தவரை விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் சிலமுறை இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

  வழக்கத்தை விட குறைவு

  வழக்கத்தை விட குறைவு

  வடகிழக்குப் பருவமழை வழக்கமாக பெய்ய வேண்டிய 23 சென்டிமீட்டரில் இருந்து 1 சென்டி மீட்டர் குறைந்துள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தற்போது வரை 22 சென்டி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  ஆணைக்காரன் சத்திரத்தில் 19 செ.மீ

  ஆணைக்காரன் சத்திரத்தில் 19 செ.மீ

  கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக நாகை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரத்தில் 19 சென்டி மீட்டரும் சிதம்பரத்தில் 15 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. வானூர் 8, காட்டுமன்னார் கோவில், மயிலாடுதுறையில் 7 சென்டி மீட்டரும், கும்பகோணம், திருவிடைமருதூர், காரைக்காலில் 6 செ.மீ.,மழையும் பெய்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A new low depression has formed in Bay of Bengal said Chennai meteorological center. Delta districts will get very heavy rain by this low.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற