தமிழகம்-கர்நாடகாவை உலுக்கும் காவிரி பிரச்சினை கடந்து வந்த பாதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காவேரி நதிநீர் பங்கீடு வழக்கு தீர்ப்பு ... பிப்.16 வெளியாக வாய்ப்பு ?

  சென்னை: காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்குகளில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், அந்த வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்:

  • 1892ல் சென்னை மாகாணம் - மைசூர் சமஸ்தானம் இடையே காவிரி நதி நீர்ப்பகிர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது
  • 1924ல் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் அணைகளை அடிப்படையாக வைத்து 50 ஆண்டு கால உடன்படிக்கை போடப்பட்டது
  A timeline of Cauvery river case
  • 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும், 1924 ஒப்பந்தபடியே காவிரி நீர்ப்பகிர்வு நடந்து வந்தது
  • 1956ல் மொழிவாரி மாநில மறுசீரமைப்பால் குடகு கர்நாடகத்தின் பகுதி ஆனது
  • கபினியின் பிறப்பிடம் மொழிவழிக் கேரளாவில் அமைந்திருந்தது என்பதால் புதிதாக காவிரி நீரில் கேரளாவும், புதுச்சேரியும் பங்கு கேட்டன
  • 1974ல் ஆண்டில் 50 ஆண்டுகால காவிரி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் நிறைவடைந்தது; 1986ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியது தமிழக அரசு
  • 1990 ஜூன் 2ல் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு காவிரி நடுவர் மன்றம் அமைத்தது. நடுவர் மன்றத்தில் கர்நாடகா-465; தமிழகம்- 566; கேரளா- 99.8; புதுச்சேரி- 9.3 டி.எம்.சி. தண்ணீர் கேட்டன
  • 1991, ஜூன் 25ம் தேதி, காவிரி நடுவர்மன்றம், இடைக்காலத் தீர்ப்பை அளித்தது
  • 1991, டிசம்பர் 11ல் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டபோது கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக பெரும் கலவரம் நடத்தப்பட்டது. உள்நாட்டிலேயே தமிழர்கள் அகதிகளாக அடித்து விரட்டப்பட்டனர்.
  • தமிழகத்திற்கு ஆண்டுக்கு 419 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என 2007 ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கியது காவிரி நடுவர் மன்றம்
  • தீர்ப்பை ஏற்க மறுத்த கர்நாடகா, தமிழகத்திற்கு 192 டிஎம்சி மட்டுமே திறந்து விட முடியும் என திட்டவட்டமாக தெரிவித்தது
  • 10 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த ஜனவரி 9 ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவித்தது
  • காவிரி வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்வராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A timeline of Cauvery river case in which Supreme court to pronounce it's verdict on tomorrow.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற