ரீல் காட்டி ஜூட் விட்ட பவித்ரா! கல்யாணமான அடுத்த நாளே 15 லட்சத்துடன் பறந்த பச்சை கிளி! பரபர தென்காசி

Subscribe to Oneindia Tamil

தென்காசி : தென்காசி அருகே காதலிப்பதாக இளைஞரிடம் பழகி திருமணம் செய்து கொண்டதோடு திருமணமான அடுத்த நாளே சுமார் 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளோடு மாயமான இளம்பெண் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி விவாகரத்து பெற்று மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களையும், வயதாகியும் திருமணமாகாத இளைஞர்களை குறி வைத்து பணம், நகைகள் மற்றும் சொத்துக்களை அபகரிக்கும் இளம்பெண்கள் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட நகை பணத்துக்காக விவாகரத்தான ஆண்களை கல்யாண புரோக்கர் மூலம் குறிவைத்து, மேக்கப் போட்டு ஏமாற்றிய 54 வயது ஆண்டியை காவல்துறையினர் கைது செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் கல்யாணமான அடுத்த நாளே 15 லட்சத்துடன் இளம்பெண் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் முத்துக்குமார் என்பவர் தான் ஏமாற்றப்பட்டவர். கோட்டைப்பட்டியைச் சேர்ந்த இளம் பெண் பவித்ரா என்பவருக்கும் முத்துக்குமாருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமண நிச்சயிக்கப்பட்டது.

இளம்பெண் பவித்ரா

இளம்பெண் பவித்ரா

திருமணத்திற்கு நாட்கள் நெருங்க நெருங்க பவித்ராவின் குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்துள்ளனர் திருமண செலவுக்கு பணம் இல்லை என்றும் திருமணம் செய்ய வேண்டுமானால் 15 லட்சம் ரூபாய் வரை தங்களுக்கு தர வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். தற்போது 15 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் திருமணம் முடிந்த 15 நாட்களில் திரும்ப தருவதாக கூறியுள்ளனர்.

15 லட்சம் மோசடி

15 லட்சம் மோசடி

பெண்ணும் அழகாக இருக்கிறார் என்பதால் மகனுக்கும் நீண்ட நாள் திருமணம் நடக்கவில்லை எனவே பணத்தை தற்போது கொடுத்து விடுவோம் என நினைத்து 15 லட்சம் ரூபாயை பவித்ராவின் குடும்பத்தினரிடம் முத்து குமாரின் குடும்பத்தினர்இரு தவணைகளாக கொடுத்துள்ளனர். இதையடுத்து பத்திரிக்கை அடித்து குடும்பத்தினர் அனைவருக்கும் கொடுத்த நிலையில் திருமணமும் முடிந்துள்ளது.

அடுத்த நாளே ஓட்டம்

அடுத்த நாளே ஓட்டம்

இந்நிலையில் திருமணம் முடிந்த அடுத்த நாளே முத்துக்குமாருடன் வாழ முடியாது என பவித்ரா வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது மேலும் திருமணத்திற்காக தான் கொண்டு வந்திருந்த பாத்திரங்கள் நகைகள் பணம் உள்ளிட்டவற்றையும் பவித்ரா எடுத்துச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமாரின் பெற்றோர் பவித்ராவை பலமுறை அழைத்தும் அவர் வீட்டுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இந்நிலை தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முத்துக்குமார் காவல் நிலையத்தில் மூன்று முறை புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யாத நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். பின்னர் நடத்திய விசாரணையில் தான் பவித்ரா மது போதைக்கு அடிமையானவர் எனவும் இதே போல பல ஆண்களுடன் பழகி பணம் நகையை மோசடி செய்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் முத்துக்குமார் தாக்கல் செய்த ஆவணங்களை ஆராய்ந்து நீதிபதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளனர் இதை எடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+