ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: ஜல்லிக்கட்டில் காளையை அடக்கவும் காளை உரிமையாளர்களுக்கும் ஆதார் கார்டு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றாலும் மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது.

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒட்டுமொத்த நிர்வாகமும் இறங்கி வேலை செய்யும்.

ஜல்லிக்கட்டு அறிவிப்பு

ஜல்லிக்கட்டு அறிவிப்பு

இந்நிலையில் மூன்று இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி அவனியாபுரத்தில் 14-ம் தேதியும், பாலமேட்டில் 15-ம் தேதியும், அலங்காநல்லூரில் 16-ம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

ஜல்லிக்கட்டு நேரம் நீட்டிப்பு

ஜல்லிக்கட்டு நேரம் நீட்டிப்பு

இந்தாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் காலை எட்டு மணியிலிருந்து மாலை மூன்று மணிவரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஒரு மணி நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கார்டு கட்டாயம்

ஆதார் கார்டு கட்டாயம்

அவனியாபுரத்தில் 14ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் காளையை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு ஆதார் கார்டு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கும் ஆதார்

ஜல்லிக்கட்டுக்கும் ஆதார்

இதுவரை மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை பெறவும் சலுகைகளை பெறவுமே ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டுக்கும் ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Aadhaar is mandatory for participating in Jallikattu. bulls owner and the players should have the Aadhaar card.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற