விழுப்புரத்தில் ஆவின் பால் லாரி கவிழ்ந்து விபத்து... சாலையில் ஆறாக ஓடிய பால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: ஆவின் பால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 1000 லிட்டர் பால் சாலையில் கொட்டி வீணானது.

விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு ஆவின் டேங்கர் லாரி ஒன்று வந்துக்கொண்டிருந்தது. விழுப்புரம் புறவழிச்சாலையில் வந்த போது அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

Aavin milk lorry met with an accident near in Vilupuram

இதில் லாரியில் இருந்த 1000 லிட்டர் பால் சாலையில் கொட்டி ஆறாக ஓடியது. லாரியின் ஓட்டுநர் லேசான காயங்களுடன் தப்பினார்.

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Aavin milk lorry met with an accident near in Vilupuram. 1000 litters milk poured on road.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற