பரணி எப்படி பட்டவர்? பிக்பாஸ் டீம் சொல்வது உண்மையா? நடிகர் அமித் விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் பரணி நேற்று வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் உள்ள சக குடும்பத்தினர் அவர் குறித்து தவறான கருத்துக்களை கூறி ஓரம் கட்டியதால் அவர் வெளியேற்றப்பட்டார்.

நடிகர் பரணி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் இருந்தால் பெண்களுக்கு பாதிப்பில்லை என பிக்பாஸ் வீட்டில் வசிக்கும் மற்ற போட்டியாளர்கள் அவரை ஓரம் கட்டினர்.

Actor Amit feels bad about the Bigg boss contastents talk on Actor Bharani

கஞ்சா கறுப்பு பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே பரணியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போதே ஜூலி உட்பட அனைவரிடமும் பரணியின் நடத்தை குறித்து தவறாக சித்தரித்ததாக தெரிகிறது.

கஞ்சா கறுப்பு வெளியேறிய நிலையில் பரணியையும் வெளியேற்றக்கூறி சினேகன் உட்பட அனைத்து போட்டியாளர்களும் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டனர். இதனால் மனமுடைந்த பரணி வீட்டில் இருந்து வெளியேற முயன்றதால் அவர் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் நடிகர் பரணி குறித்து பிக்பாஸ் குடும்பத்தினர் கூறுவது பொய் என நடிகர் அமித் தெரிவித்துள்ளார். நடிகர் பரணி ஒரு கள்ளம் கபடம் இல்லாத மனிதர் என்றும் பெண்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர் என்றும் அவர் கூறினார்.

பரணி குறித்து நடிகர் அமித் வெளியிட்டுள்ள வீடியோ வைராலாகியுள்ளது. சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் அந்த வீடியோ...

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Amit feels bad about the Bigg boss contestants talk on Actor Bharani. He said Bharani has more respect on womens. His video became Viral now.
Please Wait while comments are loading...