For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அவரு வருவேன்... வருவேன்... இவரு வந்துட்டேன்.. இந்தா வந்துட்டேன்.. இதோ வந்துகிட்டே இருக்கேன்?

நவம்பர் 7-ந் தேதி அரசியல் கட்சியை அறிவிக்கப் போவதில்லை என நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்திருக்கிறார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை; தமிழக அரசியல் களம் உண்மையிலேயே நல்ல பொழுதுபோக்கு திடலாகிவிட்டது என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. இன்று ஒன்று பேசலாம்... திடுதிப்பென மவுனமாகிவிடலாம்.. திடீரென பரபரப்பை கிளாப்பலாம் என்பதாகிவிட்டது தமிழக அரசியல் மைதானம்.

தமிழகத்தில் காலந்தோறும் அரசியல் ஆளுமைகள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள்.. அறிவுச் செறிவுமிக்க வாத பிரதாங்கள் சட்டசபைகளிலும் நாளேடுகளிலும் ரெக்கை கட்டி பறந்தன.

மெல்ல மெல்ல இது இரு துருவ அரசியலாகிப் போனது... இதனால் விவாதங்கள் என்பது பொதுமேடைகளிலான விமர்சனம் என்பதாக மட்டும் இருந்துவிட்டது. மெல்ல மெல்ல ஊடகம் விஸ்வரூப வளர்ச்சி எடுத்தது.

Recommended Video

    2.0 பாடல் வெளியீட்டு விழா.. ரஜினியின் பேச்சுக்கு பதிலடி தருவாரா கமல்?-வீடியோ
    ஒரே குரூப்

    ஒரே குரூப்

    2-ம் கட்ட, 3-ம் கட்ட பேச்சாளர்கள் அரசியல் கட்சிகளில் இருந்து வெளிப்பட்டனர். ஊடகங்களைப் போலவே அரசியல் கட்சிகளும் அரசியல் மைதானங்களில் கருத்துகளை கொட்டத் தொடங்கின. இப்போது விதம் விதமான பெயர்களிலெல்லாம் ஒரு குரூப் ஆட்களே வலம் வருகின்றனர்.

    அரசியல் களத்தில் பிள்ளை பிடிப்பவர்கள்

    அரசியல் களத்தில் பிள்ளை பிடிப்பவர்கள்

    தமிழக அரசியலில் திடுதிப்பென ஜெயலலிதா மறைந்தார். கருணாநிதி எனும் ஆளுமை அரசியல் ஓய்வை நாடிக் கொண்டது. அவ்வளவுதான்.. தமிழக விளையாட்டுத் திடல் அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுநாள் வரை பிள்ளை பூச்சிகளாய் இருந்தவர்கள் இப்போது பிள்ளை பிடிப்பவர்களாய் அரசியல் களத்துக்குள் வந்துவிட்டார்கள்.

    சங்கு ஊதிட்டேனே

    சங்கு ஊதிட்டேனே

    அங்கிட்டு ஒருவர் போருக்கு தயாராகுங்கள் என அறைகூவல் விடுக்கிறார்.. இங்கிட்டு இன்னொருவர் நானெல்லாம் எப்பவோ சங்கநாதம் ஊதிட்டேன்... அப்பவே நானெல்லாம் வந்திட்டேன் என்கிறார். இன்னொருவரோ, உள்ளே வருவதற்குள் மெர்சலாக்கிக் கொண்டிருக்கிறார்.

    டக்குன்னு ஜகா

    டக்குன்னு ஜகா

    இந்நிலையில் கமல்ஹாசன் நவம்பர் 7-ந் தேதி கிளைமாக்ஸை அறிவித்துவிடுவார் என ‘எதிர்கூறுகள்' (அவரை பற்றி சொல்லும்போது அப்படியே எழுத முயற்சிப்போமே) எய்யப்பட்டன.. என்னவோ தெரியலை.. என்ன மாயமோ தெரியலை.. ஊடக உந்தலால் கட்சியை அறிவிக்க முடியாது என ஜகா வாங்கிக் கொண்டார் மகாராஜன்.

    காத்திருத்தல் தேவை

    காத்திருத்தல் தேவை

    நல்லவேளை ஒட்டுமொத்தமாக ஒதுங்காமல் மக்கள் மன்றத்தில் பொது அறிவிப்பை வெளியிடுவேன் என்கிறார் கமல்ஹாசன்.. நிச்சயம் அவரது அறிவிப்புக்காக காத்திருங்க... எப்போது என ‘உந்தல்' மட்டும் கூடாது!

    English summary
    Actor Kamal Hassan today said that he will not launch the political party on Nov.7
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X