"உங்களுக்கு ஒரு குறும்படம் என்றவுடன்"... "எங்கே எடுத்தது" என கேட்டு சிரிப்பலையை ஏற்படுத்திய கமல்!
பிக்பாஸ் கிரான்ட் பினாலே நிகழ்ச்சியில் கமலுக்காக ஒரு குறும்படம் என்று பிக்பாஸ் தெரிவித்தவுடன் அது எங்கே எடுத்தது என்று கேட்டு கமல் சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
சென்னை: பிக்பாஸ் போட்டியின் வெற்றியாளரை அறிவிக்க நடந்த விழாவில் கமலுக்காக ஒரு குறும்படம் போடப்படுகிறது என்றவுடன் அது எங்கே எடுத்தது என்று கேட்டார் கமல்.
பிக்பாஸ் என்ற பொழுது போக்கு நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். முதலில் 15 போட்டியாளர்களும், பின்னர் விறுவிறுப்பு குறைந்தவுடன் மேலும் 4 புதிய போட்டியாளர்கள் என மொத்தம் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

முகத்திரை கிழிப்பு
ஓவியாவுக்கும் ஜூலிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது ஓவியா தன்னை ட்விஸ்ட் செய்து விட்டார் என்று சக போட்டியாளர்களிடம் ஜூலி தெரிவித்தார். ஜூலியின் இரட்டை வேடத்தை சக போட்டியாளர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்தாகவே ஒரு குறும்படத்தை வெளியிட்டார் கமல். அதன் மூலம் ஜூலியின் பொய்யான முகம் வெளியானது. இதனால் ஓவியாவிடம் சிலர் மன்னிப்பும் கேட்டனர்.

ஆரவை அதிர வைத்த
ஆரவுக்கும், சினேகனுக்கும் நடந்த பிரச்சினையில் சினேகனிடம் மன்னிப்பு கேட்ட ஆரவ், உள்ளே சென்று காயத்ரி, ரைசாவிடம் தான் மன்னிப்பே கேட்கவில்லை என்றார். ஒரு டாஸ்கின்போது இதை ஒப்புக் கொள்ளாத ஆரவுக்கு இதுகுறித்தும் குறும்படம் காட்டப்பட்டு அவரது சாயத்தை வெளுத்தார் கமல்.

ஒவ்வொரு போட்டியாளருக்கும்
அதேபோல் ஒவ்வொரு போட்டியாளர்களும் வெளியேறும் போது அவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தது முதல் கடைசியாக எலிமினேட் ஆனது வரை தொகுத்து குறும்படம் வெளியிடப்படும். ஜூலி, ஆரவின் குறும்படங்களுக்கு பிறகு, குறும்படம் என்றாலே போட்டியாளர்கள் நடுங்கும் நிலை ஏற்பட்டது.

கமலால் சிரிப்பலை
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிரான்ட் பினாலே போட்டி நேற்று நடைபெற்றது. இதில் பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த ஆரவ், சினேகனை மேடைக்கு அழைத்து வர கமல்ஹாசன் செல்லவிருந்தார். அ்போது பிக்பாஸ், உங்களுக்காக ஒரு குறும்படம் என்றார். அதற்கு கமல் எனக்கு குறும்படமா அது எங்கே எடுக்கப்பட்டது என்றார். அதற்கு பிக்பாஸ் இங்கேதான் என்றவுடன் அப்பாடா என்றார் கமல். உடனே அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications