ஊரே கூடி ஊழல் என்று ஓலமிட்டதே.. எடப்பாடி அரசுக்கு கமல் கொடுத்த பகிரங்க அடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அரசு ஊழலில் திளைத்தது என நடிகர் கமல்ஹாசன் தனது அறிக்கையின் மூலம் மீண்டும் தெளிவாக கூறியுள்ளார்.

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது என நடிகர் கமல்ஹாசன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவரும் வரிசைக்கட்டி நடிகர் கமல்ஹாசனை திட்டி தீர்த்தனர்.

நேற்று நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு டிவிட் அவர் அரசியலுக்கு வருவதை உணர்த்துவதாக இருந்தது. இந்நிலையில் நடிகர் கமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊரே கூடி ஊழல் என்று ஓலம்

ஊரே கூடி ஊழல் என்று ஓலம்

அதில் அதிமுக ஊழலில் திளைத்த கட்சி என மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றதை, ஊரே கூடி ஊழல் என்று ஓலமிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் தேவையா?

ஆதாரம் தேவையா?

அந்த ஊழல் வழக்கு குறித்து ஊடகத்தில் ஒளிப்பரப்பிய பின்பும் சாட்சி மற்றும் ஆதாரம் தேவையா என்றும் அவர் வினவியுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர்கள் கேள்விக் கேட்டதற்கும் கமல் நச் என தனது அறிக்கையில் பதிலளித்துள்ளார்.

அதற்குள் மறந்துவிட்டதா?

அதற்குள் மறந்துவிட்டதா?

அதாவது ஊரெல்லாம் கேட்ட அதிமுக அரசின் ஊழல் அதற்குள் மறந்திருந்தால் அதனை மக்களே நினைவு படுத்துவார்கள் என கூறியுள்ளார். மக்கள் சந்திக்கும் ஊழல் பிரச்சனைகள் குறித்து மக்கள் இணையதளம் மூலமாக தங்களின் புகார்களை அனுப்ப வேண்டும் என கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Punish the culprits not the Lawyers says Kamal Hassan-Oneindia Tamil
அமைச்சர்களின் முகவரி

அமைச்சர்களின் முகவரி

கார்டு, கடிதம் என எழுதி அனுப்பினால் கிழித்து போட்டு விடுவார்கள் என்று கூறியுள்ள கமல், டிஜிட்டல் யுகம் என்பதால் இமெயிலாக அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதற்காக அமைச்சர்கள் துறைசார்ந்த முகவரியையும் அவர் வெளியிட்டுள்ளார்.

http://www.tn.gov.in/ministerslist

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Kamalhassan requesting his fans to complaint about the corruption.He asked to email the corruption to the ministers.
Please Wait while comments are loading...