For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிச்சைக்காரன் கூட இந்த ரூபாயை வாங்க மாட்டான்.. மன்சூர் அலிகானின் பரபரப்பு பேச்சு

புதிய ரூ2,000 நோட்டை பிச்சைக்காரன் கூட வாங்கமாட்டான் என நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய ரூ2,000 நோட்டை பிச்சைக்காரன் கூட வாங்கமாட்டான் என்று நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற கொஞ்சம்...கொஞ்சம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மன்சூர் அலிகான் பேசியதாவது:

பிரதமர் மோடி நம்மை திடீரென ராப்பிச்சைக்காரனாக்கிவிட்டார். 100 ரூபாய் நோட்டுக்கு பேங்க்-ல் கியூவில் நின்று பிச்சை எடுத்துகிட்டிருக்கான்.

பிச்சைக்காரன் கூட...

பிச்சைக்காரன் கூட...

அப்படி எடுத்து வந்த ரூ2,000 நோட்டை பார்த்தா ஏதோ சாயம் வெளுத்து போன மாதிரி... பிச்சைக்காரன்கூட அதை வாங்க மாட்டான்.. பழைய 500 ரூபாய் நோட்டு ஸ்ட்டிராங்க இருக்கே...

சினிமா நோட்டு

சினிமா நோட்டு

இந்த புது ரூ2,000 நோட்டு டூப்ளிகேட் மாதிரி, சினிமா நோட்டு மாதிரி இருக்கு... நான் என் கருத்தை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்..

அந்த ஜனநாயகம்...

அந்த ஜனநாயகம்...

ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் ஜெயித்தாலும் ஏய் நீ வேண்டாம்னு போராடுறான்... அந்த ஜனநாயகத்தைத்தான் நாம் பாலோ அப் செய்கிறோம். ஒரு ஆள் தப்பு செய்தால் தப்புன்னு சொல்லனும்...

திடீர்னு அறிவிச்சா எப்படி?

திடீர்னு அறிவிச்சா எப்படி?

எல்லா குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கு... ஒரு திட்டமும் இல்லாம திடீர்னு அறிவிச்சா எப்படி? ஆயிரம் கோடி, ஐயாயிரம் கோடி வெச்சிருக்கவன் டாலர்ல பணத்தை மாற்றி வைத்திருக்கிறார்கள்... அவன் எவனும் கியூவில் வந்து நிற்கிறானா?

விவசாயிகள் பாதிப்பு

விவசாயிகள் பாதிப்பு

பாதிக்கப்படுவது விவசாயிகள்... செத்துப் போய் கிடக்கிறோம் ஏற்கனவே விவசாயம் பண்ணி சம்பாதிக்க முடியலை... பொருளை விற்க, வாங்க முடியலை.

வழக்கு போடுங்க

மார்ச் 31 தானே நிதி ஆண்டின் கடைசி நாள்... அதுவரைக்குத்தான் இந்த நோட்டு செல்லும்.. அதற்குப் பிறகு செல்லாதுன்னு சிஸ்டமேட்டிக்காக சொல்லி பண்ணனும்...டிராபிக் ராமசாமி மட்டும்தான் வழக்கு போடனுமா? நீங்க ஒவ்வொருத்தரும் வழக்கு போடுங்க... மார்ச் 31-தான் கடைசி நாள்னு சொல்ல வைப்போம்.

இவ்வாறு மன்சூர் அலிகான் பேசினார்.

English summary
Actor Mansoor Ali Khan slammed PM Modi for the Currency ban.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X