அந்நியர்கள் தொட்டால்! திருச்செந்தூர் யானைக்கு கோபம் வருமா? இந்த சிவகார்த்திகேயன் போட்டோவை பாருங்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுக்க இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் அந்த யானையின் பழைய புகைப்படம் ஒன்று டிரெண்டாகி வருகிறது. திருச்செந்தூர் யானை உடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்த போட்டோ டிரெண்டாகி வருகிறது.

நேற்று முதல்நாள் திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை தாக்கியதில் பாகன் உதயன், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் பலியாகி உள்ளனர். இருவரும் யானைக்கு பழங்கள் கொடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ஆக்ரோஷத்துடன் தாக்கியுள்ளது. பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பலியாகி உள்ளனர்.

thiruchendur thoothukudi elephant

நடந்தது என்ன?: திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானையுடன் பாகனின் உறவினர் சிசுபாலன் நீண்ட நேரம் செல்பி எடுத்துவிட்டு யானையை தொட்டுள்ளார். புதிதாக ஒருவர் தன்னை தொடுவது பிடிக்காததால் தெய்வானை யானை அவரை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியுள்ளது.

அவரை காப்பாற்ற வந்த யானைப் பாகன் உதயகுமாரையும் தாக்கியுள்ளது. பின் அவர் தனது பாகன் என்பதை உணர்ந்து அவரை எழுப்ப முயன்றுள்ளது. அவர் எழுந்திரிக்காததால் மீண்டும் ஆத்திரத்தில் சிசு பாலனை கடுமையாக தாக்கியுள்ளது. அப்போதுதான் இந்த மரண சம்பவம் நடந்துள்ளது.

அனுமதி இல்லை: இல்லாமல் யானையை பாகனின் உறவினர் தொட்டதுதான் காரணம். யானைக்கு இது போன்ற விஷயங்கள் பிடிக்காது. புதிதாக ஒருவர் தன்னை தொடுவது பிடிக்காததால் தெய்வானை யானை அவரை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியுள்ளது. என்னை எப்படி தொடுகிறார் என்ற கோபத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது. யார் தன்னை தெரியாதவர் தன்னை தொடுகிறார் என்ற கோபத்தில் அந்த யானை தாக்கி உள்ளது.

டிரெண்டான போட்டோ: இப்படிப்பட்ட நிலையில்தான் திருச்செந்தூர் யானை உடன் நடிகர் சிவகார்த்திகேயன் எடுத்த போட்டோ டிரெண்டாகி வருகிறது. அந்நியர்கள் தன்னை தொட்டால், புகைப்படங்கள் எடுத்தால் இந்த யானை கோபப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் இப்படிப்பட்ட நிலையில்தான் அதெல்லாம் இல்லை என்று நிரூபிக்கும் விதமாக சிவகார்திகேயனோடு இந்த யானை சாந்தமாக நிற்கும் புகைப்படம் டிரெண்டாகி வருகிறது. அப்படி என்றால் உண்மையில் அன்று அந்த யானை கோபம் அடைய என்ன காரணமாக இருந்திருக்கும். எதனால் அந்த யானை கோபம் அடைந்திருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆய்வு: இந்த சம்பவத்தை தொடந்து மாவட்ட வன அலுவலர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த யானையை ஆய்வு செய்தார். மாவட்ட வன அலுவலர் அளித்த பேட்டியில், பொதுவாக ஆண் யானைகளுக்குத்தான் மதம் பிடிக்கும். இது பெண் யானை, மதம் பிடிக்க வாய்ப்பு இல்லை. விலங்குகளின் மனநிலையை அறிய முடியாததால், அது தாக்குதல் நடத்தும் என்பதையும் யாராலும் கணிக்க முடியாது

கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. தற்போது யானை அமைதியாகவே உள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகு மேலதிக விபரங்களை தெரிவிக்கிறோம் ஆய்வுக்குப் பிறகு மாவட்ட வன அலுவலர் பேட்டி அளித்துள்ளார்.

பூஜை: கோயில் யானை மிதித்து பாகன் இருவர் உயிரிழந்த நிலையில், கோயில் நடை சுமார் 45 நிமிடங்கள் சாத்தப்பட்டது. தேவையான பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பிறகே கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. பரிகார அனைத்தும் செய்யப்பட்ட பிறகே கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+