போலி முகவரி கொடுத்து பென்ஸ்.. அமலா பால் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி நடிகையான அமலா பால் போலி முகவரி கொடுத்து பென்ஸ் கார் வாங்கிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டு சிறை கிடைக்குமாம்.

மைனா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். பின்னர் தெய்வ மகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க-2. வேலையில்லா பட்டதாரி -2 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

Actress Amala paul gave forgery address to buy a car

திரைக்கு வராத பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திலும் நடித்து கொண்டிருக்கிறார். கேரளத்தை சேர்ந்த இவர் சென்னையில் ரூ. 1.12 கோடிக்கு எஸ். கிளாஸ் பென்ஸ் கார் வாங்கினார்.

இந்த கார் போலி முகவரி மூலம் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள வாகன சட்டப்படி அந்த மாநிலத்திலும் அமலாபால் முறைப்படி வரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமலா பாலுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவின்றன. இதனால் திரைத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actress Amala Paul has given duplicate address to buy Rs. 1.1 crore worth Benz car.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற