For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கறுப்பை வெள்ளையாக்க ஹவாலாக்களை நாடும் நடிகைகள்... ஒன் இந்தியா தமிழ் எக்ஸ்க்ளூசிவ்

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது கறுப்பு பணம் வைத்திருப்பவர்களை பீதிக்கு ஆளாக்கியுள்ளது.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: மோடியின் அதிரடியில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான் கடந்த 6 நாட்களாக சொல்லெனா அவஸ்தைகளை சந்தித்து வருகின்றனர். கறுப்பு பணம் வைத்திருக்கும் கரைவேட்டிகளோ திரைத்துறை பிரபலங்களோ வங்கியின் வாசலில் கால்கடுக்க நிற்கவில்லை. அப்புறம் எப்படி அவர்கள் தங்களிடம் இருக்கும் 1000,500 நோட்டுகளை பற்றி கவலையில்லாமல் இருக்கின்றனர்? என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

தமிழ் திரையுலகத்திற்கு நிதி உதவி செய்துவரும் ஃபைனான்ஸியர்கள் தரப்பில் நாம் பேசியபோது , ஹவாலா ஏஜெண்டுகள் தான் இன்றைக்கு நடிகைகளுக்கு ஆபத்பாந்தவர்களாக இருக்கின்றனர் என்கின்றார்.

Actresses seek the help of Hawala brokers to make black money to white

பிரபல நடிகைகள் நயன்தாரா, காஜல் அகர்வால், திரிஷா, சமந்தா, இலியானா, ஹன்சீகா, அனுஷ்கா, தமனா உள்ளிட்ட பலரும் தங்களின் ஆடிட்டர்கள் மூலம் ஆலோசனை நடத்தி ஹவாலா ஏஜெண்டுகளை அணுகியுள்ளனர்.

1000, 500 நோட்டுகளை 2000 ரூபாயாக மாற்றிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. அதற்குமாறாக அவைகளுக்கு இணையாக வெளிநாட்டு கரன்சிகளை மாற்றித்தருமாறு கேட்கிறார்களாம். அப்படி மாற்றித்தர, 30 சதவீத கமிசன் கேட்கிறார்களாம் ஹவாலா ஏஜெண்டுகள்.

பல நடிகைகள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனராம். 1000, 500 நோட்டுக்களை வாங்கிக்கொள்ளும் ஹவாலா ஏஜெண்டுகள், அதில் 30 சதவீத கமிசன் போக மீதியுள்ள பணத்தின் மதிப்பில் 50 சதவீத தொகைக்கு உடனடியாக வெளிநாட்டு கரன்சியை ஒப்படைக்கிறார்களாம். மீதி தொகைக்கு டிசம்பர் 30 க்குள் மீதி கரன்சியை தருவதாக சொல்கின்றனராம்.

செல்லாத 1000, 500 நோட்டுக்களை வாங்கும் ஏஜென்டுகள், ரிசர்வ் வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்களுக்குள்ள அதிகாரிகள் தொடர்பு மூலம் மாற்றிக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில் இதற்கு சம்மதிக்கின்றனர் என்று கூறுகின்றனர்.

மோடியின் அதிரடியால் ஹவாலா ஏஜென்டுகளை தேடுவதில் மும்முரமாக இருக்கிறார்கள் திரைத்துறையின் ஆடிட்டர்களும் மேனேஜர்களும்.

English summary
Sources say that the actress in the country's various filmdoms have sought the help of hawala brokers to make the black money to white.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X