ரூ.10 ஆயிரம் கோடி பணத்தை வாக்காளர்களுக்கு வாரி இறைத்த திமுக, அதிமுக: ராமதாஸ்
சென்னை: அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் சார்பில் மட்டும் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான பணம் வாக்காளர்களுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டிருக்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவுமின்றி மிகவும் அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று முடிந்திருக்கிறது. தமிழகத்தின் தெற்கு, மேற்கு மற்றும் காவிரிப்பாசன மாவட்டங்களில் பலத்த மழை பெய்த போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தில் மாலை 6.00 மணி நிலவரப்படி 75%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. பல வாக்குச்சாவடிகளில் மக்கள் இன்னும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருவதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்க்கூடும். இவை அனைத்துமே மாற்றத்திற்கான வாக்கு களாகும்.
தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவித்த நாளிலிருந்து வாக்கு சேகரிப்பதிலும், கொள்கைகளை விளக்குவதிலும் ஆர்வம் காட்டாத திராவிடக் கட்சிகள், கடந்த காலங்களில் ஊழல் செய்து சேர்த்து வைத்த பணத்தை தொகுதிகளுக்கு கொண்டு சென்று பதுக்கி வைப்பதில் தான் அக்கறை காட்டின. எதிர்பார்த்தபடியே தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பிலிருந்தே தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இந்த இரு கட்சிகளும் பண மழை பெய்ய வைத்தன. ஒரு ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.5000 வரை பணம் வாரி இறைக்கப்பட்டது.
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் சார்பில் மட்டும் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான பணம் வாக்காளர்களுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டிருக்கிறது. பண வினியோகம் மிக அதிக அளவில் இருந்ததாக கூறி தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருப்பதே இதற்கு உதாரணம் ஆகும். இந்தியத் தேர்தல் வரலாற்றில் அளவுக்கு அதிகமான பண வினியோகத்தைக் காரணம் காட்டி எந்த தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது இல்லை. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் பண பலம் பயன்படுத்தப்பட்டதற்காக இரு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்பது தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு.
திராவிடக் கட்சிகள் வாக்குகளுக்காக பணத்தை வாரி இறைத்தாலும், அதைப் பார்த்து மயங்கி விடாமல் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. அதன் பயனாக தமிழகத்தில் மாற்றமும், அதனால் முன்னேற்றமும் ஏற்படுவது உறுதியாகிவிட்டது. மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக வாக்களித்தவர்கள் உட்பட இந்த தேர்தலில் ஜனநாயகக் கடமையாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், புதுவை மாநிலத்திலும் மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். புதுவையில் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காக வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications