For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக - பாஜக கூட்டணியா? சட்டசபையில் சிபிஎம் எம்எல்ஏ கேள்வி; ஜெ. முடிவெடுப்பார்- ஓபிஎஸ் பதில்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கப் போகிறதா? என்ற மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் கேள்விக்கு 'கூட்டணி குறித்து ஜெயலலிதாதான் முடிவெடுப்பார்' என நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் கேள்விகளை எழுப்பினார். அப்போது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காக்கிறது; சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கைகோர்க்க திட்டமிட்டிருப்பதால்தான் இந்த மவுனமா?

ADMK to join hands with BJP?

மேலும் அதிகளவு வெள்ள நிவாரண நிதி கோரி மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் கூட்டணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதான் முடிவெடுப்பார் என்றார்.

அதிமுக- பாஜகவும் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எதையும் மறுக்காமல் ஜெயலலிதா முடிவெடுப்பார் என மட்டும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
TN Minister O Panneerselvam said that CM Jayalalithaa will decide the ADMK's allinance for upcoming state assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X