அமித்ஷாவை வரவேற்க அதிமுகவின் 3 அணிகளும் போட்டி... போலீசாருடன் வனரோஜா வாக்குவாதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை வரவேற்க அதிமுகவின் 3 அணிகளும் போட்டா போட்டி போட்டுக் கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அதிலும் திருவண்ணாமலை எம்பி வனரோஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு நேற்று வந்தார். அங்கு கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

பின்னர் புதுச்சேரியில் தங்கிய அவர் இன்று காலை தனி ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தார்.

அரசு கல்லூரியில்...

அரசு கல்லூரியில்...

ஹெலிகாப்டர் இறங்குவதற்காக திருவண்ணாமலை அரசுக் கலைக்கல்லூரியில் ஹெலிபேடு அமைக்கப்பட்டிருந்தது. அதில் வந்திறங்கிய அமித்ஷாவை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இரு அணிகளும் மாறி மாறி...

இரு அணிகளும் மாறி மாறி...

அதிமுகவின் 3 கோஷ்டிகளும் மாறி மாறி வந்து அமித்ஷாவை வரவேற்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். டிடிவி தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏ-க்களான பன்னீர் செல்வம், தூசி மோகன் ஆகியோர் பூங்கொடுத்து வரவேற்றனர்.

வனரோஜாவுக்கு அனுமதி மறுப்பு

வனரோஜாவுக்கு அனுமதி மறுப்பு

இதனிடையே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சார்பில் அமித்ஷாவை வரவேற்க அதிமுக எம்பி வனரோஜா ஹெலிபேடு அமைக்கப்பட்ட கல்லூரிக்கு வந்திருந்தார். அப்போது எம்பியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மேலும் வரவேற்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இல்லை என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டது.

வாக்குவாதம்

வாக்குவாதம்

போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வனரோஜா. பின்னர் அதிமுக அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சமரசம் செய்து, வனரோஜாவை ஹெலிபேடு தளத்திற்குள் அனுமதித்தனர். தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ரமணா ஆசிரமம் அருகே பைக் பேரணி நடத்த ஏற்பாடு செய்தனர். பைக் பேரணிக்கு போலீஸ் அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்தனர். இதனாலும் போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழிசை தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுபோன்ற சம்பவங்களால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMKs 3 teams welcomed Amitsha who visited tiruvannamalai. Security officers not allowed MP Vanaroja to meet Amit shah. After a word war, she was allowed.
Please Wait while comments are loading...