For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக கவர்னரின் செயல் மரபுகளை மீறியது.. "மும்மூர்த்திகள்" கூட்டறிக்கை!

தமிழக ஆளுநர் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவது வரம்பு மீறிய செயல் என்று அதிமுக அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களான தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: அரசு நிர்வாகத்தில் தமிழக ஆளுநர் தலையிடுவதை கண்டித்து அதிமுக அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களான தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கோவையில் பயோ டாய்லெட் மற்றும் தூய்மை இந்தியா குறித்து அதிகாரிகளுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ADMK team's 3 MLAs condemned TN Governor's action

இது குறித்து கொங்கு இளைஞர் பேரவை தலைவர் எம்எல்ஏ தனியரசு ,மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி ,முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எம்எல்ஏ கருணாஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கை விவரம்: கோவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரபுகளை மீறி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசும்,முதல்வரும் இருக்கும்போது அந்த மாவட்ட அமைச்சர் வேலுமணியைக் கூட அழைக்காமல் கவர்னர் இந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்திருக்கிறார். கவர்னர் என்பவர் மாநில ஆட்சி நிர்வாகத்தின் கண்காணிப்பாளர் என்ற எல்லையை தாண்டி செயல்படுவதை ஏற்க முடியாது.

புதுச்சேரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு போட்டியாக அங்கு கவர்னர் கிரேண்பேடி நீயா ? நானா ? என செயல்படுவதால் அங்கு இரட்டை தலைமைத்துவம் உருவெடுத்து நிர்வாகம் குழப்பத்திற்குள்ளாகிருக்கிறது.

இரட்டை தலைமைத்துவம் என்பது நிர்வாக சீர்கேட்டிற்கே வழிவகுக்கும். மத்திய அரசு யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கையாண்ட யுக்தியை, தமிழ்நாட்டிற்குள்ளும் விரிவுப்படுத்தி,மாநிலங்களின் எஞ்சி நிற்கும் உரிமைகளையும் கபளிகரம் செய்யும் திட்டமாக இதனை பார்க்க வேண்டியிருக்கிறது.

மாநில சுயாட்சிக்கான முழக்கங்கள் வலுப்பெற்று வரும் நிலையில்,தமிழக கவர்னரின் சர்வாதிகார போக்கை தமிழக அரசும்,முதல்வரும் மெளனமாக வேடிக்கைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அவரவர் எல்லையில் நின்று அரசு பணிகளைப் மேற் கொள்வதே ஜனநாயகத்திற்கு நல்லது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.தமிழக கவர்னர் அரசு நிர்வாகதிற்குள் நேரடியாக தலையிடும் இதுபோன்ற போக்குகளை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

English summary
The ADMK team's MLAs Tamimun Ansari, Karunas and Thaniyarasu has sent a press release by condemning TN Governor who interferes in TN government's governance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X