அரசியல் வேறு; குடும்பம் வேறு - மாதவனுக்கு தீபா அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil
அரசியல் வேறு; குடும்பம் வேறு - மாதவனுக்கு தீபா அட்வைஸ்-வீடியோ

சென்னை : எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளரான தீபாவின் கணவர் மாதவன் தனக்கு கொலைமிரட்டல் வருவதாகப் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்கிற தனிக்கட்சி ஒன்றைத் துவங்கினார். பின்னர் அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தீபாவின் கணவரும் தனிக்கட்சி ஒன்றைத் துவங்கினார்.

Again clash starts between J Deepa and her husband Madhavan

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து ஒன்றாக இணைந்து தி.நகரில் உள்ள அவர்களது வீட்டிலேயே வாழத்துவங்கினர். தற்போது தனக்கு மீண்டும் தீபாவின் டிரைவர் ராஜா கொலைமிரட்டல் விடுப்பதாக மாம்பலம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

புகாரில், தீபாவின் கார் டிரைவரான ராஜா, தீபக்கின் நண்பர் எனவும், சில மாதங்களுக்கு முன் போயஸ் கார்டன் வீட்டில் ஏற்பட்ட கைகலப்பின் போதும் தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும், தீபாவைச் சந்திக்க வீட்டிற்கு வந்தபோது பாதுகாவலர்கள் அவரை அனுமதிக்காததால் என் நண்பர்களைத் தாக்கிவிட்டு தற்போது மீண்டும் கொலைமிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தீபாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ' அப்படி யாரும் அவருக்கு கொலைமிரட்டல் விடுக்கவில்லை. மேலும் அரசியலும், குடும்பமும் வேறு வேறு. எங்களுக்குள் எந்தக் குழப்பமும் இல்லை' என்று தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
J Deepa husband Madhavan filed a police complaint against Deepa's driver Raja. In that he says that raja threatening him to death
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற