31ம் தேதி கூடுகிறது அதிமுக செயற்குழு, பொதுக்குழு... ஜெ. அறிவிப்பு
சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 31ம் தேதி நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னையில் வரும் 31ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமா ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தலைமை செயற்குழு உறுப்பினர் பட்டியலையும் அப்போது அவர் வெளியிட்டார்.

இந்த செயற்குழு, பொதுக்குழு ஏற்கனவே நடைபெற்றிருக்க வேண்டியது. ஆனால் இடையில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறைக்குப் போய் விட்டார். ஆட்சி அலங்கோலமானது. அதிமுகவினர் கண்ணீரும் கம்பலையுமாக காணப்பட்டனர். பின்னர் குமாரசாமி புண்ணியத்தால் விடுதலையானார் ஜெயலலிதா. அதன் பின்னர் மீண்டும் முதல்வர் பதவிக்கு வந்தார். தற்போது மழை வெள்ள பாதிப்பு தமிழகத்தை, குறிப்பாக சென்னையை விட்டு இன்னும் அகலாத நிலையில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications