நோ லெக் பீஸ்.. நோ பிஷ் பிரை.. அதிமுக பொதுக்குழுவில் ஒன்லி சைவ விருந்து... குமுறும் உறுப்பினர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக் குழுவில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு சைவ உணவு விருந்து மட்டுமே பரிமாறப்பட்டது. இதனால் பொதுக்குழு உறுப்பினர்கள் குமுறிக் கொண்டிருப்பதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா காலத்தில் கூட்டப்படும் அதிமுக பொதுக்குழுவில் மதிய உணவாக பிரம்மாண்ட அசைவ விருந்து கண்டிப்பாக இடம்பெறும். இந்த அசைவ விருந்து பேசப்படக் கூடிய அளவுக்கு அசத்தலாக இருக்கும்.

ஆடு, கோழி, மீன்

ஆடு, கோழி, மீன்

ஆடு, கோழி, மீன் என அனைத்துமாக பொதுக்குழு விருந்தில் மணம் வீசும். இன்று எடப்பாடி கூட்டிய பொதுக்குழுவுக்கு வந்த உறுப்பினர்களுக்கோ பெரும் ஏமாற்றம்தான்.

காலை டிபன்

காலை டிபன்

காலையில் இட்லி, வடை, 3 வகை சட்னி, பொங்கல் என டிபன் கொடுத்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் மதிய விருந்து வெறும் சைவம் மட்டுமே என கூறியிருக்கின்றனர்.

சைவ விருந்து

சைவ விருந்து

வெஜிடபிள் பிரியாணி, சாதம், சாம்பார், ரசம், மோர், தயிர், வடை, பால் பாயாசம், அவியல், கேரட் பீன்ஸ் பொரியல், கிழங்கு வறுவல், அப்பளம், ஜாங்கிரி, ஐஸ்கிரீம், பாதாம் பால், வாழைப்பழம் என பிரமாண்ட சைவ விருந்து அளிக்கப்பட்டது. ஆனாலும் பிரியாணியும் அள்ள அள்ள வைக்கப்படும் மட்டனும் வஞ்சிரம் மீனும் இல்லை என்பதுதான் பொதுக்குழு உறுப்பினர்களின் மனக்குறை.

அசைவ விருந்து இல்லையே

அசைவ விருந்து இல்லையே

என்னதான் சைவ விருந்து தடபுடலாக இருந்தாலும் அம்மா காலத்து பொதுக்குழு அசைவ விருந்து கிடைக்கலையே என்பது அதில் பங்கேற்ற உறுப்பினர்களின் பேச்சாக இருந்தது. இதுதான் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடையே தற்போதைய விவாத பொருளாகவும் இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said that AIADMK General Council members upset over for veg food in the meeting.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற