For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அடுத்த மாதம் வெளியீடு? ஜெ. பிறந்த நாளுக்காக வெய்ட்டிங்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாள் வரும் பிப்ரவரி 24ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினமே, சட்டசபை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, மக்கள் நல கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகளும், கூட்டணி அரசியலை முன்னெடுக்க உள்ளதை அறிவித்துள்ள நிலையில், அதிமுக மட்டும் இன்னும் கூட்டணிக்கு வரும் கட்சிகள் வரலாம் என்ற அறிவிப்பை வெளியிடவில்லை.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து ஜனவரி 20ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை அதிமுக தலைமைக் கழகத்தில் விருப்ப மனு வாங்கப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பிறந்த நாள்

பிறந்த நாள்

பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாள் தினம் வருகிறது. அன்றைய தினம், அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு சென்டிமென்ட் டேஸ்ட் கூட்டலாம் என முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட தொகுதிகள்

குறிப்பிட்ட தொகுதிகள்

முழு வேட்பாளர் பட்டியலையும் வெளியிடாவிட்டாலும், நியூமராலஜி படி, குறிப்பிட்ட தொகுதிகளுக்கு மட்டுமாவது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது என்று அக்கட்சி தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கூட்டணி கட்சிகள் ஷாக்

கூட்டணி கட்சிகள் ஷாக்

கடந்த சட்டசபை தேர்தலின்போது, கூட்டணி கட்சியினரான தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் போன்றவற்றுக்கு முன் அறிவிப்பு கொடுக்காமல் 160 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து திகில் ஊட்டியிருந்தார் ஜெயலலிதா.

அதிரடி பிறந்த நாள்

அதிரடி பிறந்த நாள்

கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடுகள் முழுமையடைந்த பிறகு, ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க, கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்து அதிமுக வேட்பாளர்கள் பின்வாங்கினர். எனவே, இம்முறையும், அதிரடியோடு பிறந்த நாளை கொண்டாடுவதற்கு ஜெயலலிதா ஆயத்தமாகியிருக்கலாம் என்று தெரிகிறது.

English summary
AIADMK may be release its candidate list for assembly elections on February 24th, says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X