ஆட்சியை விட கட்சியே முக்கியம்... டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்
ஆட்சியை விட கட்சியே முக்கியம், கட்சி பிளவுப்பட கூடாது என்று பூவிருந்தவல்லி எம்எல்ஏ ஏழுமலை கூறியுள்ளார்.
புதுச்சேரி: டிடிவி தினகரன் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச வேண்டும் என எம்.எல்.ஏ. ஏழுமலை கூறியுள்ளார். ஆட்சியை விட கட்சியே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19பேர் புதுச்சேரியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவருமே டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும், சசிகலாவிற்கு ஆதரவாகவுமே பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய பூவிருந்தவல்லி எம்எல்ஏ ஏழுமலை அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் மிக அற்புதமான தலைவர் என்று கூறினார்.

முதல்வர் பேச வேண்டும்
எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக மனிதாபிமானம் மிக்க தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார். டிடிவி தினகரன் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச வேண்டும் என எம்.எல்.ஏ. ஏழுமலை தெரிவித்துள்ளார்.

கட்சியே முக்கியம்
ஆட்சியை விட கட்சியே முக்கியம், கட்சி பிளவுப்பட கூடாது என்பதே எங்கள் விருப்பம் எனவும் ஏழுமலை கூறியுள்ளார்.
இந்த ஆட்சி இல்லாவிட்டால், இன்னொரு ஆட்சி அமைத்துக்கொள்ளலாம், ஆனால் கட்சி பிளவுபட்டால் எதுவும் செய்யமுடியாது என்று கூறினார்.

20 பேர் இருக்கிறோம்
9 பேர் மட்டுமே இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை அழைத்து பேசினார் முதல்வர் பழனிச்சாமி. அதே போல 20 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ள டிடிவி தினகரனை அழைத்து பேச வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

ஒதுக்குவது ஏன்?
டிடிவி தினகரனையும், எடப்பாடி பழனிசாமியையும் இணைக்க முயற்சி செய்துவருவதாக எம்.எல்.ஏ. ரத்தன சபாபதி தெரிவித்துள்ளார். சசிகலா, தினகரனை காரணமின்றி ஒதுக்கி வைப்பது ஏன் என்றும் கேட்டுள்ளார்.

தினகரன் ஆதரவாளர்
சசிகலா, டிடிவி தினகரன் பின்னால் தான் அதிமுகவினர் நிற்கின்றனர் எனவும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தின சபாபதி கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக இருந்த எம்எல்ஏ ரத்தின சபாபதி திடீரென டிடிவி தினகரன் ஆதரவாளராக மாறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications