For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனியார் மயமாகும் சென்னை விமான நிலையம் – ஊழியர்கள் எதிர்ப்பு... ஆர்ப்பாட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய விமான நிலைய ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விமான நிலையத்தை ஆய்வு செய்ய தனியார் நிறுவன பிரதிநிதிகள் வரவுள்ள நிலையில் கருப்பு கோடி ஏந்தி எதிர்ப்புகளை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஏற்கனவே தனியார் மயமாக்கப்பட்ட டெல்லி, மும்பை உள்ளிட்ட விமான நிலையங்கள் நஷ்டத்தில் இயங்கி வருவதாக சி.ஐ.ஜி அறிக்கை தெரிவிக்கப்பட்ட பின்னரும் தற்போது சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதற்கு ஒரு பொழுதும் விடமாட்டோம் என இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Airports Authority of India employees protest against attempt to privatize airports

தற்போது சென்னை விமான நிலையம் லாபத்தில் இயங்கி வருவதாகவும் இதன் மூலம் கிடைக்கின்ற வருமானத்தை கொண்டு தான் சேலம், பாண்டிச்சேரி, மங்களூரு, திருப்பதி உள்ளிட்ட விமானநிலையங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சென்னை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்கள் 5,000 கோடி செலவு செய்யப்பட்டு உலகத்தரமான 4.5க்கு குறைவில்லாமல் அதனுடைய தரம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் எந்த காரணத்திற்காக தனியார் மயமாக்குகிறார்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது நஷ்டத்தில் இயங்கி வருகிற சிறிய விமான நிலையங்களை தனியார் மயமாக்காமல் லாபத்தில் இயங்கு வருகின்ற சென்னை போன்ற விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதற்கு என்ன காரணம் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பி இருக்கிறார்கள்.

English summary
Over 500 employees of the Airports Authority of India today staged a protest in front of the airport here, as a part of their all India agitation against the Centre's attempt to privatise airports across the country, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X