ஜல்லிக்கட்டு தடையால் சோகத்திலும் கோபத்திலும் உறைந்து கிடந்த அலங்காநல்லூர்
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பெரும் சோகத்திலும், கோபத்திலும் உறைந்து போய்க் கிடக்கிறது. யாரும் நமக்கு உதவ முன்வரவில்லையே என்ற ஆதங்கமும், ஏமாற்றமும் அலங்காநல்லூர் மக்களை பெரும் தவிப்புக்குள்ளாக்கியுள்ளது. கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் ஜல்லிக்கட்டை நடத்த முடியாமல் போனதை துக்க நாளாக அனுசரித்து வருகின்றனர் அலங்காநல்லூர் மக்கள்.
வழக்கமாக பொங்கல் நாளன்று அவனியாபுரத்திலும், அடுத்த நாளான மாட்டுப் பொங்கல் தினத்தன்று பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.
ஆனால் கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் விதித்த தடையால் அதை நடத்த முடியாமல் போனது. இந்த ஆண்டும் அதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. ஆயிலும் பல இடங்களில் தடைகளைத் தகர்த்து ஆங்காங்கே மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை நடந்துள்ளன.

கடும் கோபத்தில் அலங்காநல்லூர்
ஆனால் ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன அலங்காநல்லூர் கோபத்தில் குமுறிக் கொண்டுள்ளது. அங்கு தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

உண்ணாவிரதம்
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது முதலே அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. தொடர் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.

பீட்டாவின் கொடூர முகம்
ஜல்லிக்கட்டுக்கு மட்டும் எதிராக கொதித்தெழுந்து பாரபட்ச முகத்தைக் காட்டி வரும் பீட்டாவுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருப்பு கோலம்
இந்த நிலையில் இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்க முடியாமல் போய் விட்டது. இதனால் வாடி வாசல் முன்பு கூடி மக்கள் குத்து விளக்கு ஏற்றி வழிபட்டனர். கருப்புக் கோலமிட்டு எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications