For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்தனை கட்சிகளையும் விலைக்கு வாங்கி "அமோக" வெற்றியை அறுவடை செய்த தினகரன்

ஆர்.கே.நகரில் அத்தனை கட்சிகளும் இணைந்துதான் தினகரனை அமோகமாக வெற்றி பெற வைத்துள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    தினகரனின் வெற்றிக்கு இவர் தான் காரணம் மக்களே!- வீடியோ

    சென்னை: ஆர்.கே.நகரில் தொடக்கம் முதலே அத்தனை கட்சிகளையும் பர்சேஸ் செய்வதில் தினகரன் தரப்பு மும்முரம் காட்டி வந்தது. இந்த பர்சேஸுக்கு நல்ல பலனாக அமோக வெற்றியை அறுவடை செய்திருக்கிறார் தினகரன்.

    ஆர்.கே.நகர் தொகுதி என்றுதான் இல்லை.. ஏதோ ஒரு தொகுதியில் ஜெயித்தாக வேண்டும்; அதுதான் ஒரு கட்சியை நடத்த துடியாய் துடிக்கும் தினகரனுக்கான தேவை.

    அரசு ஆதரவு

    அரசு ஆதரவு

    இதனால்தான் ஏப்ரல் மாதம் இடைத் தேர்தலின் போது ஒரு ஓட்டுக்கு ரூ4,000 பிக்ஸ் செய்து வாக்காளர்களை விலைக்கு வாங்கியது தினகரன் தரப்பு. அப்போது ஆளும் கட்சியின் ஒட்டுமொத்த பலமும் தினகரனுக்கு இருந்தது.

    எல்லாவற்றுக் பணம்

    எல்லாவற்றுக் பணம்

    ஆனால் தேர்தல் நடைபெறாமல் போன நிலையில் மீண்டும் தேர்தல் களத்துக்கு வந்தார் தினகரன். இம்முறை தமக்கு எதிராக தேர்தல் களத்தில் நின்ற, நிற்காத அத்தனை கட்சிகளையும் வளைத்துப் போட்டது தினகரன் தரப்பு. ஒரு கட்சியின் பிரமுகரால் 10 ஓட்டு கிடைக்கிறதா? லட்சத்தை பேசு பிடி என்பதுதான் தினகரன் வியூகம்.

    ஒதுங்கிய கட்சிகள்

    ஒதுங்கிய கட்சிகள்

    தினகரனின் இந்த வியூகத்தை மற்ற கட்சிகள் நன்கு அறிந்தே இருந்தும் 'ஏனோ' கோட்டைவிட்டன.. அந்த கட்சியும் வாக்காளர்களுக்கும் பணம் தரவில்லை.. சொந்த கட்சியினருக்கும் தேர்தல் செலவுக்கும் பணம் தராமல் ஒதுங்கிக் கொண்டது.

    நாளையும் காசு

    நாளையும் காசு

    இதனால் ஒட்டுமொத்த ஆர்.கே.நகரில் உள்ள அத்தனை கட்சிகளும் இன்றும் காசு கிடைக்கும் நாளையும் காசு கொட்டும் என்கிற கணக்குகளின் அடிப்படையில் தினகரனை ஜெயிக்க வைத்து இருக்கிறார்கள் என்பதுதான் கள நிலவரம்.

    English summary
    All Party cadres supported and voted to Dinakaran in RK Nagar By Poll.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X