For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 16 பொருட்கள் அடங்கிய 'பேபி கிட்': ஜெ. அறிவிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, குழந்தை பராமரிப்புக்குத் தேவையான 16 பொருட்கள் அடங்கிய 'அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்பு:

ஏழை எளிய மக்களுக்கு, தரமான மருத்துவச் சேவை, தங்கு தடையின்றி கிடைத்திடவும், அனைத்து மக்களும் நோயற்ற வாழ்க்கை வாழவும் தேவையான திட்டங்களை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

’Amma’ babycare kits for newborns in govt hospitals

திருச்சி மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் தலா 20 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 60 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று மேன்மைமிகு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

இதன் மூலம், மேற்படி மருத்துவமனைகளின் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைப் பிரிவுகள் வலுப்படுத்தப்படுவதோடு, 200 படுக்கைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு, நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். மேலும், கூடுதலாக சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1,000 ரூபாய் மதிப்புடைய "‘அம்மா' குழந்தை நல பரிசு பெட்டகம்" வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பெட்டகம், குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தை உடை, குழந்தை படுக்கை, கொசு பாதுகாப்பு வலை, குழந்தை நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ, சோப்புப் பெட்டி, சோப்பு, நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்ப்பாலை அதிகரிக்கவும் ‘சௌபாக்கியா' சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு பெட்டகம் என 16 பொருட்களை உள்ளடக்கியதாகும்.

நடப்பு ஆண்டில் இத்திட்டத்திற்கு ரூ. 67 கோடி செலவு ஏற்படும். இதனால் 6.7 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர். இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

English summary
Tamil Nadu government today announced ‘Amma’ babycare kits to newborns across the state to extend caring hands to mothers delivering babies in state-run hospitals.The government would spend over ₹67 crore which would benefit over 6.7 lakh babies this year alone, Chief Minister Jayalalithaa said, making a suo motu statement in the Assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X