பற்றி எரியும் மாட்டிறைச்சி பிரச்னை...எமி ஜாக்சன் மூலம் 'கோ வெஜிடரியன்' கேம்பெய்ன் நடத்தும் பீட்டா!

நாடு முழுவதும் மாட்டிறைச்சி தடைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் முன்னணி நடிகை எமி ஜாக்சனின் சைவத்திற்கு மாறுங்கள் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை : இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் மாட்டிறைச்சி உணவுத் திருவிழா
நடைபெற்று வரும் நிலையில் பீட்டா தனது வில்லத்தனத்தை தொடங்கியுள்ளது.

தமிழக இளைஞர்களுக்குள் இருந்த போராட்ட குணத்தையும், இன உணர்வையும் வெளிக் கொண்டு வர முக்கிய பங்காற்றிய பீட்டா அமைப்பு தன்னை
விலங்குகள் உரிமைக்காக போராடும் அமைப்பு என உலகம் முழுவதும் அடையாளப்படுத்திக் கொள்கிறது.

ஆதரவற்ற விலங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் அமைப்பாக தொடங்கிய பீட்டா அமைப்பு நாளடைவில் தாங்கள் மட்டுமே விலங்குகள் மீது அக்கறை கொண்டவர்கள் மற்றவர்கள் எல்லாம் கொடூரக்காரர்கள் என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தொடர்ந்து நீதிமன்ற அனுமதி வாங்கி தடை மேல் தடை போட்டு பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு
தடை போட்டது. எனினும் வெகுண்டெழுந்த போட்டக்காரர்களின் மெரினா போராட்டத்தால் சிறப்பு சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

 வாலாட்டும் பீட்டா

வாலாட்டும் பீட்டா

அத்தோடு வாலை சுருட்டிக் கொண்டு சும்மா இல்லாமல் கடந்த முறை தமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றிருந்த போது அவரது அறையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியது தவறு என்று அப்போது பீட்டா முதல்வரையே முற்றுகையிட்டது.

வம்பு

வம்பு

நாடு முழுவதும் தற்போது மாட்டிறைச்சி தடை விவகாரத்திற்கு எதிராக மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜூன் 12ம் தேதி அசைவம் இல்லா தினம் என்றும் அதற்காக ஒரு விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளது.

 எமியின் ஹாட் போட்டோ

எமியின் ஹாட் போட்டோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 திரைப்பட கதாநாயகி எமி ஜாக்சன் பிளாஸ்டிக் உடலில் பிளாஸ்டி பேப்ரால் ஆன ஆடையை அணிந்திருக்க, மெட்டல் ஹூக்குகளில் கறியை தொங்கவிடுவது போன்ற போஸில் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. வயிற்றில் ஹூக் குத்திய ரத்தத்தோடு நிற்கும் எமியின் ஹாட் போட்டேவிற்கு கீழே 'சைவத்திற்கு மாறுங்கள்' என்ற ஸ்லோகனும் கொடுக்கப்பட்டுள்ளது.

 சைவப் பிரச்சாரம்

சைவப் பிரச்சாரம்

மேலும் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறியதால் தன்னுடைய மேனி பளபளப்பு கூடியிருப்பதாக எமி ஜாக்சன் தெரிவித்துள்ளதாக பீட்டா கூறுகிறது. மேலும் சைவத்திற்கு மாறியதால் எப்போதும்,ஃப்ரெஷ்ஷாகவும் லைட்டாகவும் இருப்பது போன்ற உணர்வு இருப்பதாகவும் எமி கூறியுள்ளாராம். அசைவம் சாப்பிடுவதால் புற்றுநோய், இதய நோய் மற்றும் உடல்பருமன் போன்றவை ஏற்படும் என்றும் எமி தெரிவித்துள்ளார்.

 தேவையா இந்த பிரச்சாரம்

தேவையா இந்த பிரச்சாரம்

ஏற்கனவே பீட்டாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது செமத்தயாக வாங்கி கட்டிக் கொண்டு ஓடிய த்ரிஷா, இப்போது தான் மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பியுள்ளார். இந்நிலையில் ஷங்கரின் 2.0 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜோடியாக நடிக்கும் எமி ஜாக்சன் பற்றி எரியும் மாட்டிறைச்சி விவகாரத்திற்கு மத்தியில் பீட்டாவிற்கு கொடுத்துள்ள போஸ் அனலை கிளப்பியுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+