For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெங்குவை ஒழிக்க களமிறங்கிய அன்புமணி... நிலவேம்பு குடிநீர் விநியோகம்

டெங்கு காய்ச்சலை ஒழிக்க தமிழகம் முழுவதும் பசுமை தாயகம் சார்பில் நிலவேம்பு கசாயம் அளிக்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு பரவி வருகிறது. காய்ச்சலைக்கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் நிலவேம்பு கசாயம் அளிக்கப்போகிறார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Anbumani Ramadoss plan to distributes herbal drink to prevent dengue

டெங்கு காய்ச்சலை முழுமையாக ஒழிப்பது என்பது உடனடியாக சாத்தியமில்லை என்றாலும் கூட, கடந்த கால அனுபவங்களின் மூலம் டெங்கு காய்ச்சல் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும், அதையும் தாண்டி டெங்கு பரவினால் அதை நவீன மருத்துவம் மூலம் குணப்படுத்துவதும் சாத்தியமான விஷயம் தான்.

டெங்கு அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் பதற்றம் அடையத் தேவையில்லை. டெங்கு காய்ச்சலுக்கு முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் எளிதில் குணமடைந்து விடலாம்.

பப்பாளி இலைச்சாறு, மலை வேம்பு சாறு ஆகியவற்றை காய்ச்சி குடிப்பதன் மூலமும், நிலவேம்பு கசாயத்தை அருந்துவதன் மூலமும் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்; குணப்படுத்தவும் முடியும். இதற்கெல்லாம் மேலாக டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடீஸ் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது முக்கியமாகும்.

இந்த ஆண்டும் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை உள்ளிட்ட நகரங்களில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் நிலவேம்பு கசாயம் மக்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Anbumani Ramadoss will distribute a herbal concoction called Nilavembu Kudineer which is believed to be the best remedy for dengue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X