வாய்ப்பு கொடுத்தால் சிபிஎஸ்இ முறையை விட தரமான கல்வியை தருவோம்... அன்புமணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தை ஆள்வதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் சிபிஎஸ்இயைவிட தரமான கல்வியைக் கொடுக்க முடியும் என்று தருமபுரி எம்.பி.யும் பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்தும் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் இடமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டிருந்தது குறித்தும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக கல்வித் துறையில் முறைகேடா? அதை நேருக்கு நேர் விவாதிக்க அன்புமணி தயாரா? என்று அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்திருந்தார்.

அதையேற்ற சவாலுக்கு தாம் தயாராக உள்ளதாக கூறி ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் மாலை 4 மணிக்கு விவாதத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் அன்புமணி தெரிவித்திருந்தார். இதன்படி 4 மணிக்கு முத்தமிழ் பேரவைக்கு அன்புமணி வந்திருந்தார்.

விவாதத்துக்கு வராத செங்கோட்டையன்

விவாதத்துக்கு வராத செங்கோட்டையன்

அங்கு மேடையில் இருநாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஒரு நாற்காலியில் அன்புமணி உட்கார்ந்திருந்தார். மற்றொன்று செங்கோட்டையனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதி வரை செங்கோட்டையன் வரவே இல்லை.

90% பேர் ஊழலில்..

90% பேர் ஊழலில்..

இதனால் மீண்டும் அவருக்கு அன்புமணி அழைப்பு விடுத்தார். செங்கோட்டையனுக்காக காத்திருந்து அவர் வராததால் முத்தமிழ் பேரவைக்கு வெளியே வந்த அன்புமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக அரசில் பணியாற்றும் செயலாளர்களில் 90 சதவீதம் பேர் ஊழலில் சிக்கியவர்களாகவே இருக்கின்றனர். 10 சதவீதம் பேர் மட்டுமே நேர்மையாக இருக்கின்றனர்.

நேர்மையான அதிகாரிகள்

நேர்மையான அதிகாரிகள்

அமைச்சர்கள் சொல்லும் எல்லாவற்றையும் அதிகாரிகள் கேட்கக் கூடாது. நல்ல நேர்மையான, திறமையான அதிகாரிகள் அரசில் அங்கம் வகிக்க வேண்டும். அப்போதுதான் கல்வித் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதன் தரத்தையும் உயர்த்த முடியும்.

இலவசக் கல்வி

இலவசக் கல்வி

கல்வித்துறையில் ஊழலில் திளைத்து அதன் மாண்பே கெட்டுவிட்டது. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் கல்வித்துறையில் எங்களால் நிறைய மாற்றங்கள் செய்துகாட்ட முடியும். ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள முடியும். சமச்சீரான, இலவசமான கல்வியை கொடுக்க முடியும்.

தரமான கல்வி

தரமான கல்வி

மென்பொருள் வழி கல்வி சாத்தியம் என்பதை நிரூபிக்க முடியும். சிபிஎஸ்இ தரத்தை விட மேம்பட்ட கல்வியை அரசு சார்பில் கொடுக்க முடியும். இதையெல்லாம் பாமகவால் மட்டுமே செய்துதர முடியும்.

மக்கள் பணி

மக்கள் பணி

நாடாளுமன்றத்துக்கு நான் அடிக்கடி செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கேட்கிறீர்கள். அங்கு நான் செல்லவில்லை என்றாலும் மக்கள் பணிகளை செவ்வணே ஆற்றுகிறேன். அதிமுகவில் எத்தனை அணிகள் பிரிந்தாலும் அதில் பாதிப்பு என்னவோ மக்களுக்குத்தான். திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர போவதாக கூறியிருக்கிறார். ஆனால் மக்களுக்கு திமுக, அதிமுக மீது நம்பிக்கையே இல்லையே என்றார் அவர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Anbumani Ramadoss who was waiting for Minister Sengottaiyan for debate about School education says that if PMK will get chance to rule TN, they can give free education to all.
Please Wait while comments are loading...