For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களை நேரடியாகவே சீண்டிப் பார்க்கிறது பாஜக.. டிவிட்டரில் கொந்தளிப்பு! #wedojalikattu

தமிழர்களை நேரடியாகவே சீண்டிப் பார்க்கும் செயல்தான் மத்திய அரசு பொங்கல் விடுமுறையை ரத்து செய்துள்ளது என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: முதலில் தமிழர்களின் விவசாயத்தை மத்திய அரசு காவிரி நீரை பெற்றுத் தராமல் மறைமுகமாக சீரழித்தது. ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் அது நாடகமாடி வருகிறது. இப்போது பொங்கல் பண்டிகையை விடுமுறைப் பட்டியலிலிருந்து நீக்கியிருப்பது தமிழர்களையும், தமிழர்களின் கலாச்சாரத்தையும் அது பகிரங்கமாக சீண்டிப் பார்த்துள்ளதாகவே அர்த்தம் என்று டிவிட்டரில் பலரும் கொந்தளித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை கட்டாய பொது விடுமுறைப் பட்டியலிலிருந்து நீக்கி விட்டது மத்திய அரசு. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் இதை முழுமையாக அனுபவிக்க முடியாது. பண்டிகையை கொண்டாடவும் முடியாது. விருப்ப விடுமுறையாக இதை மாற்றி, பொங்கல் பண்டிகைக்குரிய மரியாதையை அவமதித்து விட்டது மத்திய அரசு.

ஒட்டுமொத்த தமிழர்களும் மத்திய அரசின் இந்த செயலால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதமாக மாறியுள்ளது. பலரும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தமிழர்களையும் தடை செய்து விடுங்கள்

ராம் வெண்பா என்பவர் போட்டுள்ள பதிவு இது- No surprise on central gov announce about #pongalholiday soon ban pongal ban jallikattu and ban's tamil culture and people #wedojalikattu

தமிழர்களோடு விளையாடாதீர்கள்

தமிழர்களோடு விளையாடாதீர்கள்

ஸ்ரீ என்பவர் போட்டுள்ள பதிவு இது- #pongalholiday government of India removed Pongal from it's holiday's list, Shame on you @narendramodi stop your political Game on Tamil.

இந்தியாவை விட்டே நீக்கிடுங்க

கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து #பொங்கல் பண்டிகை நீக்கம். அப்டியே #இந்தியால இருந்து தமிழ்நாட்ட நீக்கிடுங்க புண்ணியமா போகும் என்று கொந்தளித்துள்ளார் அருண் என்பவர்.

நியாயமான கேள்வி

எந்தளவுக்கு வகைபோக இல்லாம 50 எம்பி வச்சிருக்க அதிமுக காவிங்ககிட்ட சிக்கியிருந்தா அவனுங்க இவ்ளோ தெனாவெட்டா முடிவெடுப்பானுங்க #பொங்கல்

டைவர்ட் பண்றாங்களாமாம்

#பொங்கல் கட்டாய விடுமுறை இல்லை இதவச்சு நம்மள டைவர்ட் பண்றாங்களாமாம் என்று கூறியுள்ளார் எந்திரப் புலவன்.

சமூக வலைதளத்தில் மத்திய அரசின் இந்த விடுமுறை ரத்து பெரும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிகிறது. பலவற்றை வெளியிட முடியாத அளவுக்கு கடும் வார்த்தைகளால் மத்திய அரசை மக்கள் சாடி வருகின்றனர்.

English summary
So many people have vented their anger in social media against Centre on Pongal leave cancellation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X