திருப்பத்தூர் துள்ளுதே.. அரக்கோணம் மக்களுக்கு "குஷி".. அட திருவள்ளூர் வேற.. பறந்து வந்த குட் நியூஸ்
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் என 3 மாவட்ட மக்களுமே மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகிறார்கள்.. என்ன காரணம்?
நாடு முழுவதும் 21 சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில், சென்னைக்கு 3 ரயில் சேவை வழங்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் டூ கோயம்புத்தூர், சென்னை டூ பெங்களூரு, சென்னை சென்ட்ரல் டூ மைசூரு ஆகியவை ஆகும்.

ஜோலார்பேட்டை: நாடு முழுவதும் பிரபலமாகிவரும் வந்தே பாரத் ரயில்கள், தமிழகத்திலும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அரக்கோணம், ஜோலார்பேட்டை நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், வந்தே பாரத் ரயிலும் அரக்கோணம் வழியாக இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டன. அதாவது, இதுவரை பயணிகள் இந்த ரயிலில் அமர்ந்து மட்டும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வந்தது.
இப்போது, வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதிகள் கொண்டதாகவும், மின்சார ரயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக, வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணிகளும் ரயில்வே துறை சார்பில் துரிதமாகியும் வருகிறதாம்..
ஜோலார்பேட்டை: அதன்படி, அரக்கோணம்- ஜோலார் பேட்டை போன்ற நகரங்களை இணைக்கும் மின்சார ரயில்களுக்கு மாற்றாக இயக்குவதற்காக வந்தே மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. அதுமட்டுமல்ல, இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயணிகள் சேவைக்காக, இயக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் கடந்த மாதமே நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
ஜோலார்பேட்டை: இந்நிலையில், சதாப்தி ரயில் சேவை குறித்து, சில நாட்களுக்கு முன்பு முக்கிய அப்டேட் வெளியாகியிருந்தது.. அதாவது, ஜோலார்பேட்டையில் சதாப்தி ரயிலுக்கு, நிறுத்தம் குறித்த வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட வண்ணம் இருந்தன.. கர்நாடகா மாநிலம் மைசூரு இடையே இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயிலானது, ஜோலார்பேட்டையில் நிற்பதில்லை. முக்கிய வழித்தடமான ஜோலார்பேட்டையில், ரயில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்று பயணிகள் நீண்டகாலமாகவே, தொடர்ந்து வலியுறுத்தியபடியே இருந்தனர்..
எல்.முருகன்: இந்த கோரிக்கையைதான், ரயில்வே வாரியம் ஏற்றுக்கொண்டுவிட்டது.. அதன்படி, இன்று முதல் சதாப்தி ரயில், இரு மார்க்கங்களிலும் தலா ஒரு நிமிடம் நின்று செல்லுமாம்.. ரயில் எண் 12027 மற்றும் 12028 கொண்ட சென்னை டூ பெங்களூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தொடர்பாக, தெற்கு ரயில்வே முக்கிய அப்டேட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், "சென்னையில் இருந்து புறப்படும் ரயில் இரவு 8.14 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். அங்கிருந்து 8.15 மணிக்கு புறப்பட்டு செல்லும். மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து வரும் போது காலை 7.49 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும். அங்கிருந்து 7.50 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை: ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று திருவண்ணாமலை எம்பி சிஎன் அண்ணாதுரையும், பொதுமக்களை போலவே, மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.. இதையடுத்துதான், ஜூலை 9ம் தேதி முதல் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என்று மத்திய ரயில்வே அறிவித்தது.
இதற்கான விழாதான் நேற்றைய தினம் நடந்துள்ளது.. ஜோலார்பேட்டை ரயில்நிலைய 1வது நடைமேடையில் திமுக சார்பில் விழா மேடை அமைக்கப்பட்டது. எம்.பி சி.என்.அண்ணாதுரை மற்றும் எம்எல்ஏ கே.தேவராஜி, பால்வளத்தலைவர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மகிழ்ச்சி: இதன்மூலம், திருவள்ளூர், அரக்கோணம் (வேலூர்), ஜோலார்பேட்டை (திருப்பத்தூர்) என 3 மாவட்டத்தை சேர்ந்த மக்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. காரணம், இவர்களுக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்து செல்வது மிகவும் வசதியாக இருக்கிறது. அதனால், சென்னை டூ பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் அங்கு நின்று சென்றால், நேரம் மிச்சமாவதுடன், பெரிய பலனாகவும் தங்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்த்தனர். அந்த கோரிக்கை தற்போது, நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications