திண்டுக்கல் பாடியூரில் அகழ்வாராய்ச்சி நடத்த தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : தொல்லியல் ஆய்வு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள திண்டுக்கல் பாடியூரில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தொல்லியர் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பாடியூரில் மண்மூடிப்போன கோட்டை ஒன்று உள்ளது. சமீபத்தில் அங்கு பண்பாட்டுத்துறை பேராசிரியர்கள் மனோகரன், அசோகன் மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

Archeological department experts demands a excavation in Padiyur

அப்போது அவர்களுக்கு பழமையான தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன. இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:

தற்போது கோட்டை மேடு என்று அழைக்கப்படும் இந்தப்பகுதி, 200 ஆண்டுகளுக்கு முன்பு நரிமேடு என்று அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இங்கு நடத்தப்பட்ட ஆய்வில் இங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், சங்க கால மக்கள் பயன்படுத்திய கருவிகள், சுடுமண் பொம்மைகள், திருகுகல் மற்றும் அகல்விளக்கு ஆகிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தப்பகுதியில் ஆய்வு மேற்க்கொண்டால் இன்னும் பல் முக்கியமான தகவல்கள் தெரியவரும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, அரசு இங்கு தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Archeological department experts demands a excavation in Padiyur, dindugal district. This may bring so many hidden information of Tamils where they lived 2500 years ago.
Please Wait while comments are loading...