ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் கொடுத்தவர்கள் விபரங்களை பெற்றார் சசிகலா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக, தனக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்களின் விவரங்களை பெங்களூர் சிறையிலிருக்கும், சசிகலா பெற்றுக் கொண்டுள்ளதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து தமிழக சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் தனது விசாரணையை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது.

Arumugasamy commission gives the details to Sasikala

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2106ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து தமிழக சார்பில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் தனது விசாரணையை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் தன் மீது புகார் கொடுத்தவர்கள் யார், இதுவரை விசாரணை நடத்தியவர்களிடம் தங்கள் தரப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை சசி தரப்பு முன் வைத்தது. அதை ஆறுமுகசாமி கமிஷன்

விசாரணை ஆணையத்தில் தனக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்களின் விவரங்களை கேட்டு சசிகலா தரப்பில் மனுத்தாக்கல் செய்ய‌ப்பட்டது. இதை விசாரித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், கடந்த 30ஆம்‌ தேதி விவரங்களை வழங்க உத்தரவிட்டிருந்தது.

இதுவரை விசாரணை ஆணையம் பெற்ற 22 பேரின் விவரங்கள் மற்றும் வாக்குமூலங்கள் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இதனையடுத்து, எதிர் வாக்குமூலம் குறித்த விவரங்கள் விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டதாகவும், அதை கடந்த 1ஆம் தேதியன்று சசிகலா பெற்று கொண்டதாகவும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் அப்பல்லோ நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்டது. சசிகலா தரப்பு இந்த 22 பேரிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ள காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்களைப் பெற்ற, ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என விசாரணை ஆணையம் கூறியிருப்பதால், வரும் 7 அல்லது 8ஆம் தேதி சசிகலா பதிலளிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சசிகலா மவுன விரதம் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் தனது விரதத்தை முடித்த பின்னரே விசாரணை ஆணையத்தில் ஆஜராவார் என்று கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Justice Arumugasamy commission has provided the details to Sasikala as sought by her counsel.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற