For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவனை கைவிட்டு 7 பேரை காதல் வலையில் வீழ்த்திய அனிதா... கோடிக்கணக்கில் பண மோசடி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அருப்புக்கோட்டை அனிதாதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பு செய்தி. பணமோசடி, காதலர் தினத்தில் குத்தாட்டம் என்று வீடியோக்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. யார் இந்த அனிதா என்று அருப்புக்கோட்டையில் விசாரித்தால் கதை கதையாக சொல்கிறார்கள்.

சென்னை பெரும்பாக்கத்தில் வசித்து வந்த அனிதா, உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை எஸ்பிளனேடு காவல்நிலையத்தில் 7 பேர் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் அனிதா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணையில், ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு பல இளைஞர்களை ஏமாற்றி அவர் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.

இந்த பணத்தில், சென்னை பெரும்பாக்கத்திலும், அருப்புக்கோட்டையிலும் உறவினர்கள் பெயரில் இரண்டு வீடுகளைக் கட்டியுள்ளதாகவும், இதுதவிர பினாமிகளின் பெயரில் பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

பல அரசியல் பிரமுகர்களையும் வீட்டுக்கு வரவழைத்து மது விருந்தளித்து லட்ச கணக்கில் பணத்தை கறந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது, அவர்களுடன் அனிதா போட்ட குத்தாட்ட வீடியோ கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

அருப்புக்கோட்டையை சேர்ந்த அனிதா, கல்லூரியில் படிக்கும் போதே செல்வகுமாரை காதலித்து திருமணம் செய்தார். பிறகு அவரிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி விட்டு அவரை விவாகரத்து செய்து விட்டார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்த போது அங்கு சிகிச்சைக்காக வந்த டிரைவர் சுரேசை காதலித்து, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

போலீசில் புகார்

போலீசில் புகார்

உயர்நீதிமன்றத்தில் வேலைவாங்கித் தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்துள்ளார் அனிதா. இதுபற்றி உயர்நீதிமன்ற வளாக காவல்நிலையத்தில் த அனிதா மீது 7 இளைஞர்கள் புகார் கொடுத்தனர். அதில் அனிதா உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, ஒவ்வொருவரிடமும் ரூ.3லட்சம் வீதம் மொத்தம் ரூ.12 லட்சம் வாங்கினார். ஆனால் யாருக்கும் வேலை வாங்கி தரவில்லை. தற்போது, பணத்தை திருப்பிக் கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கிறார் என்று கூறியிருந்தனர்.

லட்சக்கணக்கில் பண மோசடி

லட்சக்கணக்கில் பண மோசடி

இதனையடுத்தே அனிதாவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர் அப்போது ஃபேஸ்புக் மூலம் காதல் வலை வீசி பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை கறந்துள்ளார். அனிதாவின் பேச்சே கிறங்கடிக்கும் விதமாக இருக்குமாம். அருப்புக்கோட்டையில் அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், தந்தைக்கு ஸ்பின்னிங் மில் இருக்கிறது என்றும் ஏமாற்றி இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை ஆட்டையை போட்டுள்ளார்.

கணவனே உடந்தை

கணவனே உடந்தை

அனிதாவின் இரண்டாவது கணவர் சுரேஷ் பிரபாகரும் இந்த மோசடிக்கு உடந்தை. சென்னையில் உள்ள பிரபல ஐ.டி கம்பெனியின் மேலாளர் என்று கூறி பல பணக்கார நண்பர்களுக்கு அனிதாவை அறிமுகம் செய்துள்ளார். இதனையடுத்தே ஐ.டி. நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக கூறி, பல லட்சங்களை கறந்துள்ளார் அனிதா. போலி அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கொடுத்தும் ஏமாற்றியுள்ளார்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

தனது சித்தி ஹைகோர்ட் வக்கீல் என்றும், அங்கு வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கியிருக்கிறாள் அனிதா. பணம் வாங்கியவர்கள் திருப்பி கேட்டால் கொலை மிரட்டுலும் விடுத்திருக்கிறார் அனிதா.

சொந்த ஊரில் சொத்துக்கள்

சொந்த ஊரில் சொத்துக்கள்

இப்படி ஏமாற்றி வாங்கிய பணத்தில், அருப்புக்கோட்டையில் உறவினர்கள் பெயரில் வீடுகளைக் கட்டியுள்ளதாகவும், மேலும், பினாமிகளின் பெயரில் பல்வேறு இடங்களில் வீடுகளையும், நிலங்களையும் வாங்கி குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேகமாக பரவும் பண மோசடி அனிதாவின் குத்தாட்ட வீடியோ !

வேகமாக பரவும் பண மோசடி அனிதாவின் குத்தாட்ட வீடியோ!www.ns7.tv

Posted by News7Tamil on Monday, February 15, 2016

குத்தாட்ட வீடியோ

மேலும், பல அரசியில் பிரமுகர்களையும் வீட்டுக்கு வரவழைத்து மது விருந்தளித்து லட்ச கணக்கில் பணத்தை கறந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்போது, அவர்களுடன் அனிதா போட்ட குத்தாட்ட வீடியோ கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Chennai police arrest a 27 year old woman name Anitha in connection with money cheating case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X