ஜெயலலிதாவுக்கு டிச.5 வரை சிக்கலான நேரம்... சொல்வது ஜோதிடர்கள்!
முதல்வர் ஜெயலலிதாவிற்கு டிசம்பர் 4ம் தேதிவரை நேரம் சரியில்லை என்றும் 5ம் தேதிக்கு மேல் டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றும் ஜோதிடர்கள் நேரம் குறித்த நிலையில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 75 நாளாக சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
டிசம்பர் 5ம் தேதி முதல் 12ம் தேதிக்குள் ஒருநாளில் முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவர்களிடம் விவாதிக்கப்பட்டது. அப்போது, சிகிச்சை முழுமை அடையும் வரை, ஜெயலலிதா பூரண உடல்நலம் பெறும் வரை மருத்துவனையில் இருப்பதே நல்லது என்று சனிக்கிழமையன்று எய்ம்ஸ் மருத்துவக்குழுவினர் ஆலோசனை கூறினர். இதனையடுத்து ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் தேதி தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் முதல்வரின் உடல்நிலையில் மீண்டும் பாதிக்கப்பட்டது. நேற்று மாலையில் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்தனர். அதிகாலையில் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இன்று காலை ஆறு மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சசிகல நடராஜன் தங்கி இருக்கும் அறைக்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், முன்னாள் காவல்துறை டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோரும் சென்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 4 வரை ஜெயலலிதாவுக்கு சிக்கலான நேரமாக உள்ளது என்று ஜோதிடர்கள் எச்சரித்தது போலவே முதல்வர் ஜெயலலிதா மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையை ஜெயலலிதா கடந்து விட்டால் அவருக்கு பாதிப்பு இல்லை என்றும் கூறியுள்ளனர். ஜெயலலிதா பூரண நலமடைந்து மீண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனையாகும.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications