அழகேசனுக்கு தகுதி இல்லாததால் காதலை முறித்தேன்: அஷ்வினியின் புகார் மனு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நான் காதலிக்க மறுத்தேன் - அழகேசன் பரபரப்பு வாக்குமூலம்- வீடியோ

  சென்னை: சென்னை மீனாட்சி கல்லூரி மாணவி அஸ்வினி கொல்லப்பட்ட விவகாரத்தில் கடந்த வாரம் அவர் கொடுத்த புகார் மனு மூலம் அவரும் அழகேசனை காதலித்தது தெரியவந்தது.

  சென்னை கே கே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாயிலில் பிகாம் படித்து வந்தவர் அஸ்வினி. நேற்று மதியம் கல்லூரி விட்டு வெளியே வந்த இவருடன் ஒரு இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

  இந்நிலையில் திடீரென அந்த இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஸ்வினியை துடிக்க துடிக்க கொலை செய்தார். இதையடுத்து பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

  புகாரில் அஸ்வினி கூறியது என்ன

  புகாரில் அஸ்வினி கூறியது என்ன

  கடந்த 16-ஆம் தேதி மதுரவாயல் காவல் நிலையத்தில் அஸ்வினி புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பது தொடர்பாக சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

  தண்ணீர் கேன் பிசினஸ்

  தண்ணீர் கேன் பிசினஸ்

  புகார் மனுவில் அவர் கூறுகையில் மதுரவாயலை சேர்ந்த எனக்கு அப்பகுதியில் தண்ணீர் கேன் போடும் அழகேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக அவருடன் பழகிய நிலையில் ஒரு நாள் திடீரென அழகேசன் என்னை காதலிப்பதாக தெரிவித்தார்.

  காதலித்தேன்

  காதலித்தேன்

  இதையடுத்து நானும் அவரது காதலை ஏற்றுக் கொண்டு அவரை காதலித்தேன். ஆனால் சில நாட்கள் கழித்து அவருக்கு என்னை காதலிக்க தகுதியில்லாததால் என்னுடன் பழக வேண்டாம் என்று கூறிவிட்டேன். இதையடுத்து சிறிது நாட்கள் அவர் என்னுடன் பேசாமல் அவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.

  போலீஸ் எச்சரிக்கை

  போலீஸ் எச்சரிக்கை

  இதையடுத்து சில நாட்கள் கழித்து மீண்டும் என்னை காதலிப்பதாக அழகேசன் தொந்தரவு செய்தார். நான் பலமுறை கூறியும் அவர் கேட்காததால் போலீஸில் புகார் அளிப்பதாக அஸ்வினி தனது புகார் கடிதத்தில் கூறியுள்ளார்.

  ஜாமீனில் வெளியே வந்த இளைஞர்

  ஜாமீனில் வெளியே வந்த இளைஞர்

  இந்த புகாரின் பேரில் போலீஸார் அழகேசனை கைது செய்து சிறையில அடைத்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அழகேசன், அஸ்வினியை நேற்று மதியம் கொலை செய்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Aswini who studied in Chennai Meenakshi College murdered by Azhagesan yesterday. She already gave complaint against Azhagesan reveals that she was also love affair with him.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற